பூஜா ஜத்யன் | ஹர்விந்தர் சிங் 
செய்திகள்

பாரா வில்வித்தை: கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய அணி காலிறுதிக்கு தகுதி!

பாரா வில்வித்தை போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய அணி காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.

DIN

பாரீஸில் நடைபெற்றுவரும் பாராலிம்பிக்ஸ் பாரா வில்வித்தை போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய அணி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

பாரா வில்வித்தையில் இந்திய அணி சார்பில் கலந்து கொண்டுள்ள தங்கப்பதக்கம் வென்ற ஹர்விந்தர் சிங் மற்றும் பூஜா ஜத்யன் இருவரும் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

ஹர்விந்தர் சிங் மற்றும் பூஜா ஜத்யன் இருவரும் ஆஸ்திரேலியாவின் டேமோன் கெண்டன் ஸ்மித்-அமண்டா ஜென்னிங்ஸ் ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினர்.

ஆடவருக்கான பாரா வில்வித்தையில் இந்திய அணிக்கு முதல் தங்கம் வென்று தந்தவரான ஹர்விந்தர் சிங் பூஜாவுடன் இணைந்துள்ளதால் இரண்டாவது பதக்கத்தை வெல்வார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இந்த இணை முதல் சுற்றில் 31-18 மற்றும் 35-24 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றது. இரண்டாவது சுற்றில் 27-33 மற்றும் 24-33 என்ற புள்ளிகள் கணக்கில் பின்னடைவை சந்தித்தாலும் முடிவில் 16-5 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினர்.

காலிறுதியில் இந்த இணை போலாந்து இணை சந்திக்கவுள்ளனர்.

ஹரியாணாவில் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த ஹர்விந்தர், ஒன்றரை வயதாக இருந்தபோது, ​​டெங்குவால் பாதிக்கப்பட்டு, அவருக்கு செலுத்தப்பட்ட ஊசிகளின் பக்கவிளைவுகளால், அவரது கால்கள் செயலிழந்தன.

இதேபோல, 1997 ஆம் ஆண்டில், பூஜா ஜத்யன் இரண்டு மாத குழந்தையாக இருந்தபோது, ​​​​அதிக காய்ச்சலுக்காக மருத்துவர்களின் அலட்சியத்தால் தவறான ஊசி போடப்பட்டதால் இடது காலில் போலியோ ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்ல நாள் இன்று: தினப்பலன்கள்!

இன்றுமுதல் 50% வரி! டிரம்ப்பின் அழைப்பை 4 முறை மறுத்த பிரதமர் மோடி?

கோவாவில் அக்டோபா் - நவம்பரில் ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டி

ஆவுடையாா்கோவிலில் தலையில்லா புத்தா் சிலை கண்டெடுப்பு

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

SCROLL FOR NEXT