தமிழக வீரர் டி. குகேஷ்.  படம்: எக்ஸ் / ஃபிடே
செய்திகள்

செஸ் ஒலிம்பியாட்: சீனாவை வீழ்த்திய இந்திய அணி முதலிடம் தக்கவைப்பு!

புடாபெஸ்டில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி பலம் வாய்ந்த சீனாவை வீழ்த்தியது.

DIN

ஹங்கேரி தலைநகா் புடாபெஸ்டில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 193 அணிகள் பங்கேற்கும் ஓபன் பிரிவில் இந்திய அணிகள் அசத்தி வருகின்றன.

6ஆவது சுற்றில் இந்திய ஆடவா் பிரிவில் இந்திய ஹங்கேரி அணிகள் மோதின. அதில் இந்தியா 3-1 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிப் பெற்றது .

7ஆவது சுற்றில் சீனாவுடன் மோதிய ஆடவர் அணி 2.5-1.5 என்ற புள்ளிகளில் வென்றது.

3 இந்தியர்களும் டிராவில் முடிக்க தமிழக வீரர் டி.குகேஷின் வெற்றிதான் இந்த வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

ஜியார்ஜியாவுடன் மோதிய இந்திய மகளிரணி 3-1 என்ற புள்ளிகளில் வெற்றி பெற்றது. 7 சுற்றுகள் முடிவில் இந்தியாவின் இரண்டு அணிகளும் தலா 14 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் நீடிக்கின்றன.

8ஆவது சுற்றில் ஆடவர் அணி ஈரானுடனும் மகளிர் அணி போலந்துடம் மோதுகின்றன.

தங்கம் வெல்லுமா இந்திய அணி?

11 சுற்றுகள் கொண்ட போட்டியில் இன்னும் மீதமிருக்கும் போட்டிகளில் இந்தியா ஆதிக்கம் செலுத்தினால் நிச்சயமாக தங்கம் வெல்லும்.

கடந்த முறை சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட்டில் இந்திய அணி வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது.

மற்ற வீரர்கள் டிராவில் முடிக்க டி.குகேஷ் தனது 80ஆவது நகர்த்தலில் வெற்றியை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

பெரிதும் எதிர்பார்த்த உலக சாம்பியன் டிங் லிரென் பங்கேற்காவிட்டாலும் சீன அணி அற்புதமாகவே விளையாடியது. சீனா 11 புள்ளிகளுடன் 8ஆவது இடத்தில் இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT