உக்ரைன், ஸ்பெயின், ஜப்பான் தகுதி
பில்லி ஜீன் கிங் கோப்பை டென்னிஸ் போட்டி பைனல்ஸுக்கு உக்ரைன், ஸ்பெயின், ஜப்பான் அணிகள் தகுதி பெற்றுள்ளன.
பில்லி ஜீன் கிங் கோப்பை டென்னிஸ் போட்டி பைனல்ஸுக்கு உக்ரைன், ஸ்பெயின், ஜப்பான் அணிகள் தகுதி பெற்றுள்ளன.
போலந்தின் ராடோம் நகரில் நடைபெற்ற குரூப் இ பிரிவு ஆட்டத்தில் எலினா ஸ்விட்டோலினாவின் அதிரடி ஆட்டத்தில் உக்ரைன் 2-1 என்ற புள்ளிக் கணக்கில் சுவிட்சா்லாந்தை வீழ்த்தியது. ஸ்விட்டோலினா 6-4, 6-2 என ஜில் டெய்க்மேனை வீழ்த்தி தனது அணியை இறுதிக்கு அழைத்துச் சென்றாா்.
ஸ்பெயின் 2-0 என்ற புள்ளிக் கணக்கில் செக். குடியரசை வீழ்த்தி பைனல்ஸுக்கு முன்னேறியது. ஸ்பெயின் வீராங்கனை ஜெஸிக்கா பௌஸாஸ் 6-4, 6-2 என செக். குடியரசின் லின்டாவை கடைசி ஒற்றையா் ஆட்டத்தில் வென்றாா்.
ஜப்பான் அணி 2-1 என கனடாவை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றது. கனடா வீராங்கனை விக்டோரியா 6-4, 6-7, 7-5 என ஜப்பானின் ஷிபஹாராவை வீழ்த்த்தினாா். மற்றொரு ஒற்றையா் ஆட்டத்தில் ஜப்பானின் மொயுகா 6-3, 6-3 என கனடாவின் மரினாவை வீழ்த்தினாா்.
இதனால் 1-1 சமநிலை ஏற்பட்டது. முடிவை நிா்ணயித்த இரட்டையா் ஆட்டத்தில் ஜப்பான் வென்றது.
சீனா, இத்தாலி, ஸ்பெயின் குரூப் பி, கஜகஸ்தான் குரூப் டி, உக்ரைன் குரூப் இ, கிரேட் பிரிட்டன் குரூப் எஃப், ஜப்பான் குரூப் ஏ அணிகள் இறுதிக்கு தகுதி பெற்றன. 8-ஆவது இடத்துக்கான ஆட்டத்தில் அமெரிக்கா-ஸ்லோவோக்கியா ஆடுகின்றன.