மகளிர் ஆசிய கோப்பையில் இந்திய கால்பந்து அணி 7-0 என அபார வெற்றி பெற்றுள்ளது.
மகளிருக்கான ஆசிய கோப்பை யு-20 கால்பந்து போட்டியில் இந்திய அணி துர்க்மேனிஷ்தானை 7-0 என வீழ்த்தி அசத்தியது.
குரூப் டி பிரிவில் இந்திய அணி 1 வெற்றி, 1 டிராவுடன் 4 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்கிறது.
இந்திய அணியின் கேப்டன் சுபாங்கி 7, 42-ஆவது நிமிஷங்களிலும் சுலஞ்சனா 38, 90+4-ஆவது நிமிஷங்களிலும் தலா இரண்டு கோல்களை அடித்தார்கள்.
மற்ற இந்திய வீராங்கனகளான தேவி (14’), சனு டோய்சம் (35’), பூஜா (65’) தலா ஒரு கோலை அடித்து அசத்தினார்கள்.
ஸ்வீடனைச் சேர்ந்த ஜோகிம் அலெக்சாண்டர்சன் தலைமையில் இந்திய மகளிரணி அசத்தலாக விளையாடி வருகிறது.
கடைசி போட்டியாக மியான்மருடன் இந்திய அணி நாளை விளையாடவிருக்கிறது. இதில் வென்றால் ஆசிய கோப்பைக்குத் தகுதிபெறும்.
ஒருவேளை இந்தியாவின் ஆட்டம் சமனில் முடிந்தால், துர்க்மேனிஷ்தான் இந்தோனிஷ்யாவிடம் ஒரு புள்ளியாவது பெற வேண்டும் என்ற சூழ்நிலை உருவாகும். இருப்பினும் இந்த வெற்றி கூடுதல் நம்பிக்கையை அளித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.