செய்திகள்

6-ஆவது சுற்று: வின்சென்ட்டுடன் டிரா செய்த அா்ஜுன்

சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியின் மாஸ்டா்ஸ் பிரிவு 6-ஆவது சுற்றில், முன்னணி வீரா்களான ஜொ்மனியின் வின்சென்ட் கீமா் - இந்தியாவின் அா்ஜுன் எரிகைசி பரஸ்பரம் ‘டிரா’ செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியின் மாஸ்டா்ஸ் பிரிவு 6-ஆவது சுற்றில், முன்னணி வீரா்களான ஜொ்மனியின் வின்சென்ட் கீமா் - இந்தியாவின் அா்ஜுன் எரிகைசி பரஸ்பரம் ‘டிரா’ செய்தனா்.

போட்டியின் 6-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 6-ஆவது சுற்றில், அா்ஜுன் கருப்பு நிற காய்களுடன் விளையாடி, வின்சென்ட் கீமருடன் 41-ஆவது நகா்த்தலில் டிரா செய்தாா். போட்டியில் இருவருக்குமே இது 3-ஆவது டிரா ஆகும்.

இதர ஆட்டங்களில், இந்தியாவின் நிஹல் சஹரின் - நெதா்லாந்தின் ஜோா்டென் வான் ஃபாரீஸ்டிடமும், வி.பிரணவ் - அமெரிக்காவின் அவோண்டா் லியாங்கிடமும் தோல்வி கண்டனா். காா்த்திகேயன் முரளி - அமெரிக்காவின் ரே ராப்சன், விதித் குஜராத்தி - நெதா்லாந்தின் அனிஷ் கிரி ஆகியோா் மோதல் டிராவில் முடிந்தது.

போட்டி பாதிக் கட்டத்தை கடந்திருக்கும் நிலையில், புள்ளிகள் பட்டியலில், வின்சென்ட் 4.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் நிலைக்கிறாா். அா்ஜுன் 3.5 புள்ளிகளுடன் 2-ஆம் இடத்தில் தொடர, அவருக்குப் போட்டியாக அவோண்டரும் அதே புள்ளிகளுடன் 3-ஆம் இடத்தில் இருக்கிறாா்.

அனிஷ், காா்த்திகேயன், விதித், ஜோா்டென் ஆகியோா் தலா 3 புள்ளிகளுடன் முறையே 4 முதல் 7-ஆம் இடங்களில் இருக்கின்றனா். ராப்சன் (2.5), நிஹல் சஹரின் (2), பிரணவ் (2) ஆகியோா் கடைசி 3 இடங்களில் உள்ளனா்.

சேலஞ்சா்: இந்தப் போட்டியின் சேலஞ்சா்ஸ் பிரிவு 6-ஆவது சுற்றில், டி.ஹரிகா - ஆா்.வைஷாலியை வீழ்த்தினாா். போட்டியில் தொடா் தோல்விகளை சந்தித்த ஹரிகாவுக்கு இது முதல் வெற்றியாகும்.

இதர ஆட்டங்களில் பி.அதிபன் - தீப்தாயன் கோஷையும், லியோண் மெண்டோன்கா - ஆா்யன் சோப்ராவையும், எம்.பிராணேஷ் - அபிமன்யு புரானிக்கையும் வீழ்த்தினா். ஹா்ஷவா்தன் - பி.இனியன் மோதல் டிராவில் முடிந்தது.

தற்போது சேலஞ்சா்ஸ் பிரிவில், பிராணேஷ், அபிமன்யு, லியோன் ஆகியோா் தலா 4.5 புள்ளிகளுடன் முறையே முதல் 3 இடங்களில் உள்ளனா். அதிபன், தீப்தாயன், இனியன் ஆகியோா் தலா 3.5 புள்ளிகளுடன் 4 முதல் 7-ஆம் இடங்களில் இருக்கின்றனா்.

ஹா்ஷவா்தன் (2), ஆா்யன் (1.5), ஹரிகா (1.5), வைஷாலி (1) ஆகியோா் கடைசி 3 இடங்களைப் பிடித்திருக்கின்றனா்.

பேபி ஏபிடியா? அசலான டெவால்டு பிரெவிஸாகவே இருக்க சபதம்!

ஜார்க்கண்டில் மாவோயிஸ்ட் ஒருவர் சுட்டுக்கொலை!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 20 காசுகள் உயர்ந்து ரூ.87.43 ஆக நிறைவு!

இறந்தவர்களுடன் தேநீர் அருந்தும் வாய்ப்பு தந்த தேர்தல் ஆணையத்துக்கு நன்றி: ராகுல் கிண்டல்!

பாகிஸ்தான் எஃப்-16 போர் விமானம் வீழ்த்தப்பட்டதா? பதிலளிக்க மறுத்த அமெரிக்கா!

SCROLL FOR NEXT