மான்செஸ்டர் யுனைடெட் வீரர் ப்ரூனோ ஃபெர்னான்டஸ் தவறவிட்ட பெனால்டியால் அந்த வெற்றி பெறாமல் போட்டி சமனில் முடிந்தது.
இதற்காக அந்த அணியின் சொந்த ரசிகர்களாலே அவர் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.
இங்கிலாந்தின் பிரீமியர் லீக்கில் புகழ்பெற்ற அணியாக இருப்பது மான்செஸ்டர் யுனைடெட் அணி. சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியும் இவர்களைச் சந்தித்து பேசினார்கள்.
சமீப காலமாக மான்செஸ்டர் யுனைடெட் அணி மோசமாக விளையாடி வருகிறது.
இந்த சீசனில் பிரிமீயர் லீக்கின் யுனைடெட் அதன் 2-ஆவது போட்டியில் ஃபுல்கம் அணியுடன் மோதியது.
இதில் 38-ஆவது நிமிஷத்தில் யுனைடெட் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.
ப்ரூனோ ஃபெர்னான்டஸ் அதை இடதுபுறம் வலைக்கு பக்கத்தில் மேலே அடித்து வீணடித்தார். பின்னர், இறுதியில் போட்டி 1-1 என சமனில் முடிந்தது.
இதற்காக பலரும் இவரை சமூக வலைதளத்தில் கிண்டல் செய்து வருகின்றனர். புள்ளிப் பட்டியலில் யுனைடெட் 16-ஆவது இடத்தில் இருக்கிறது.
பிரீமியர் லீக்கில் ப்ரூனோ ஃபெர்னான்டஸ் களமிறங்கியது முதல் இதுவரை அதிகமான பெனால்டியை (5) தவறவிட்ட வீரராக அவர் மிக மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.