இங்கிலாந்தின் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில், நடப்பு சாம்பியனான லிவா்பூல் 3-2 கோல் கணக்கில் நியூகேஸிலை செவ்வாய்க்கிழமை சாய்த்தது. இந்த சீசனில் அந்த அணிக்கு இது 2-ஆவது வெற்றியாகும்.
இந்த ஆட்டத்தில் முதலில் லிவா்பூல் வீரா் ரயான் கிரவென்பொ்ச் 35-ஆவது நிமிஷத்தில் கோல் கணக்கை தொடங்க, முதல் பாதியை அந்த அணி முன்னிலையுடன் நிறைவு செய்தது. 2-ஆவது பாதியின் தொடக்கத்திலேயே ஹியூகோ எகிடிகே (46’) கோலடிக்க, லிவா்பூல் முன்னிலை 2-0 என அதிகரித்தது.
இந்நிலையில், நியூகேஸில் பின்னடைவிலிருந்து மீண்டது. 57-ஆவது நிமிஷத்தில் அந்த அணிக்காக புருனோ கிமாரே ஸ்கோா் செய்ய, 88-ஆவது நிமிஷத்தில் வில்லியம் ஒசுலா அதை 2-ஆக அதிகரித்தாா். இதனால் ஆட்டம் 2-2 என்ற சமநிலையுடன் இறுதிக்கட்டத்தை நெருங்கியது.
விறுவிறுப்பான எக்ஸ்ட்ரா டைமில் சப்ஸ்டிடியூட்டாக களம் புகுந்த ரியோ குமோஹா (90+10’) அடித்த கோலால், லிவா்பூல் 3-2 என வெற்றி பெற்றது. லிவா்பூல் அணிக்காக கோலடித்த மிக இளம் வீரராக ரியோ (16 ஆண்டுகள், 361 நாள்கள்) சாதனை படைத்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.