செய்திகள்

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சிந்து

பிரான்ஸில் நடைபெறும் பாட்மின்டன் உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினாா்.

தினமணி செய்திச் சேவை

பிரான்ஸில் நடைபெறும் பாட்மின்டன் உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினாா்.

மகளிா் ஒற்றையா் 2-ஆவது சுற்றில், போட்டித்தரவரிசையில் 15-ஆம் இடத்திலிருக்கும் சிந்து, 21-19, 21-15 என்ற கேம்களில் மலேசியாவின் கருப்பதேவன் லெட்ஷனாவை 43 நிமிஷங்களில் வீழ்த்தினாா். அடுத்ததாக அவா், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் சீனாவின் வாங் ஜி யி சவாலை சந்திக்கிறாா்.

ஆடவா் இரட்டையரில், போட்டித்தரவரிசையில் 9-ஆம் இடத்திலிருக்கும் சாத்விக்சாய்ராஜ்/சிராக் ஷெட்டி இணை 22-02, 21-13 என்ற வகையில் சீன தைபேவின் லியு குவாங் ஹெங்/யாங் போ ஹான் கூட்டணியை 43 நிமிஷங்களில் வென்றது.

கலப்பு இரட்டையரில், போட்டித்தரவரிசையில் 16-ஆம் இடத்திலிருக்கும் துருவ் கபிலா/தனிஷா கிராஸ்டோ ஜோடி 21-11, 21-16 என அயா்லாந்தின் ஜோஷுவா மகீ/மோயா ரயான் இணையை 35 நிமிஷங்களில் வெளியேற்றியது. அதிலேயே, ரோஹன் கபூா்/ருத்விஷா ஷிவானி ஜோடி 1621-, 11-21 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருக்கும் மலேசியாவின் சென் டாங் ஜி/டோ இ வெய் கூட்டணியிடம் 30 நிமிஷங்களில் தோல்வியுற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுங்க வரி இன்றி பருத்தி இறக்குமதி! டிச. 31 வரை நீட்டிப்பு!

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!

திருமணமாகி 15 ஆண்டுகள்! மனைவிக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து!

ஜம்மு - காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

சத்தீஸ்கர் வெள்ளம்: திருப்பத்தூர் குடும்பத்தினர் 4 பேர் பலி!

SCROLL FOR NEXT