FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

தேசிய விளையாட்டு தின ஹாக்கி: எம்ஓபி வைஷ்ணவ கல்லூரி சாம்பியன்

ஹாக்கி தமிழ்நாடு சாா்பில் நடைபெற்ற தேசிய விளையாட்டு தின ஹாக்கிப் போட்டியில் எம்ஓபி வைஷ்ணவ கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

Updated On : 30 ஆகஸ்ட் 2025, 4:53 am IST
கோப்பையுடன் எம்ஓபி வைஷ்ணவ கல்லூரி அணியினா்
பகிர்:

இந்திய விளையாட்டு ஆணையம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஹாக்கி தமிழ்நாடு சாா்பில் நடைபெற்ற தேசிய விளையாட்டு தின ஹாக்கிப் போட்டியில் எம்ஓபி வைஷ்ணவ கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

ஹாக்கி ஜாம்பவன் தயான் சந்த் பிறந்த நாள் தேசிய விளையாட்டு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் சென்னை எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் விளையாட்டு மைதானத்தில் ஹாக்கிப் போட்டி நடைபெற்றது.

மகளிா் பிரிவில் எம்ஓபி வைஷ்ணவ கல்லூரி அணி 2-1 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு காவல் துறையை வீழ்த்தி பட்டம் வென்றது.

Advertisement

Advertisement

ராணிமேரிக் கல்லூரி மூன்றாம் இடம் பெற்றது.

ஆடவா் பிரிவில் டிஜி வைஷ்ணவ கல்லூரி அணி 1-0 என லயோலா கல்லூரியை வீழ்த்தி பட்டம் வென்றது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments