டைமண்ட் லீக்: 2-ஆவது இடம் பிடித்த நீரஜ் சோப்ரா!
டைமண்ட் லீக்கில் நீரஜ் சோப்ரா இரண்டாமிடம் பிடித்தது பற்றி...
இந்தியாவின் நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா டைமண்ட் லீக்கில் இரண்டாம் இடம் பிடித்து அசத்தினார்.
கடந்தமுறை 90 மீட்டருக்கு எறிந்த நீரஜ் சோப்ரா இந்தமுறை அதைவிடக் குறைவாகவே எறிந்துள்ளார்.
ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்ற டைமண்ட் லீக்கில் இந்தியாவின் நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா ஏமாற்றம் அளித்தார்.
Advertisement
Advertisement
இந்தத் தொடரில் ஜெர்மனியின் ஜுலியன் வெபர் தன்னுடைய ஆறு வாய்ப்புகளில் இரண்டு முறை 90 மீட்டருக்கு அதிகமாக ஈட்டி எறிந்து அசத்தினார். அதில் அதிகபட்சமாக 91.51மீட்டருக்கு எறிந்திருந்தார்.
இரண்டு முறை டைமண்ட் லீக்கில் ரன்னர் -அப்பாகி இருந்த ஜுலியன் வெபர் தற்போது முதல்முறையாக கோப்பையை வென்றுள்ளார்.
நீரஜ் சோப்ரா 85.01 மீட்டருக்கு எறிந்து இரண்டாமிடம் பிடித்தார். அடுத்த மாதம் டோக்கியோவில் நடைபெற இருக்கும் உலக சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வெல்லும் முனைப்பில் இருக்கிறார்.
India's star player Neeraj Chopra impressed by finishing second in the Diamond League.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.