செய்திகள்

கால்பந்து விளையாட்டு பிரச்னைகள் விரைவில் தீர்வு காண்பதாக அமைச்சர் மன்சுக் மாண்டவியா உறுதி

நாட்டில் கால்பந்து விளையாட்டில் நிலவும் பிரச்னைகளுக்கு விரைவில் உரிய தீர்வு காணப்படுமென, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா புதன்கிழமை உறுதியளித்தார்.

இணையதளச் செய்திப் பிரிவு

புது தில்லி: நாட்டில் கால்பந்து விளையாட்டில் நிலவும் பிரச்னைகளுக்கு விரைவில் உரிய தீர்வு காணப்படுமென, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா புதன்கிழமை உறுதியளித்தார்.

கால்பந்து விளையாட்டின் பிரதிநிதிகளுடனான பலமணி நேர ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு, அவர் இதை தெரிவித்தார்.

இதுதொடர்பாக, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சக வட்டாரங்கள், கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் கூறியதாவது:

அமைச்சர் மாண்டவியாவுடனான ஆலோசனைக் கூட்டத்தில், அகில இந்திய கால்பந்து சம்மேளன தலைவர் கல்யாண் செளபே, இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) மற்றும் ஐ லீக் அணிகளின் நிர்வாகிகள், விளம்பரதார நிறுவனங்கள், ஐஎஸ்எல் போட்டியை ஒருங்கிணைக்கும் ஃபுட்பால் ஸ்போர்ட்ஸ் டெவலப்மன்ட் லிமிடெட் (எஃப்எஸ்டிஎல்), ஒடிடி தளங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அவர்களின் கருத்துகளை கேட்டு அறிந்துகொண்ட அமைச்சர் மாண்டவியா, பிரச்னைகள் தொடர்ந்து நீடிக்காது எனவும், அடுத்த சில நாள்களில் அதற்கான தீர்வு கொண்டுவரப்படும் என்றும் தெரிவித்தார். முன்னதாக, நாட்டில் கால்பந்து விளையாட்டு எப்படி இத்தகைய இக்கட்டான நிலைக்குச் சென்றது என அமைச்சர் எழுப்பிய கேள்விக்கு, எந்தவொரு தரப்பினரும் தெளிவான பதிலை வழங்கவில்லை.

இப்படி கைமீறிய நிலைக்கு கால்பந்து விளையாட்டு சென்றதற்காக, கால்பந்து சம்மேளன நிர்வாகிகளை அமைச்சர் கடிந்துகொண்டார். அனைத்து தரப்பினரும் தங்களிடையேயான கருத்து வேறுபாடுகளை கடந்து, பிரச்னைக்கு தீர்வு காண்பதில் ஒருங்கிணையுமாறு அறிவுறுத்தினார் என்று அந்த வட்டாரங்கள் கூறின.

ஐஎஸ்எல் போட்டியை நடத்துவதற்கான ஒட்டுமொத்த உரிம ஒப்பந்தத்தை நீட்டிப்பதிலும், அந்தப் போட்டிக்கான விளம்பரதாரரை கண்டடைவதிலும் பிரச்னை எழுந்தது. இதனால் நடப்பாண்டு ஐஎஸ்எல் போட்டிக்கான ஏற்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை அடுத்து சர்ச்சை பெரிதாகியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT