செய்திகள்

ஓய்வுபெற்றார் மோஹித் சர்மா

இந்திய கிரிக்கெட் பெளலர் மோஹித் சர்மா (37), அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

தினமணி செய்திச் சேவை

புது தில்லி: இந்திய கிரிக்கெட் பெளலர் மோஹித் சர்மா (37), அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக புதன்கிழமை அறிவித்தார்.

இந்தியாவுக்காக 26 ஒருநாள் மற்றும் 8 டி20 ஆட்டங்களில் அவர் விளையாடியிருக்கிறார். அதில் முறையே, 31 மற்றும் 6 விக்கெட்டுகள் அவர் வீழ்த்தியிருக்கிறார்.

2013 ஆகஸ்ட்டில் ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடரின் மூலமாக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான மோஹித் சர்மா, கடைசியாக 2015 அக்டோபரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் விளையாடினார்.

2015-இல் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் விளையாடிய இந்திய அணியிலும் அவர் அங்கம் வகித்தார்.

ஐபிஎல் போட்டியில் 172 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் அவர், 167 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார். அந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்காக அவர் விளையாடியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சபரிமலையில் பெண்கள் வழிபாட்டு உரிமை! 9 நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வில் விசாரணை!

நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல்: பேரவையில் அமைச்சர் எ.வ. வேலு ஆய்வு!

ராஜஸ்தான்: ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலி

வித் லவ் வசூல் இவ்வளவா..?

பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ரியல் எஸ்டேட், பார்மா பங்குகள் உயர்வு!!

SCROLL FOR NEXT