செய்திகள்

பிக்கிள் பால் லீக்: சென்னை வெற்றி

இந்திய பிக்கிள்பால் லீக் தொடரில் சென்னை சூப்பர் வாரியர்ஸ் அணி 3-ஆவது வெற்றியை பதிவு செய்தது.

தினமணி செய்திச் சேவை

புது தில்லி: இந்திய பிக்கிள்பால் லீக் தொடரில் சென்னை சூப்பர் வாரியர்ஸ் அணி 3-ஆவது வெற்றியை பதிவு செய்தது. பெங்களூரு பிளாஸ்டர்ஸ் முதல் வெற்றி பெற்றது.

இந்திய பிக்கிள்பால் சங்கம் சார்பில் முதலாவது லீக் தொடர் புது தில்லியில் நடைபெற்று வருகிறது. சென்னை சூப்பர் வாரியர்ஸ் அணி புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் குர்கான் கேபிடல் வாரியர்ஸ் அணியை 5-1 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி மூன்றாவது வெஹற்றியைப் பெற்றது.

முதல் வெற்றியை பெறுவதற்காக மோதிய பெங்களூரு பிளாஸ்டர்ஸ்-மும்பை ஸ்மாஷர்ஸ் அணிகள் மோதின. இரு அணிகளும் சரிக்கு சரியாக ஆடிய நிலையில், 4-2 என்ற புள்ளிக் கணக்கில் பெங்களூரு முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

வியாழக்கிழமை ஆட்டங்களில் லக்னெள லெப்பர்ட்ஸ்=குர்கான் கேபிடல் வாரியர்ஸூம், பெங்களூரு-சென்னை அணிகளும் மோதுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT