செய்திகள்

காலிறுதியில் ஸ்பெயின் - நியூஸிலாந்து, இந்திய-பெல்ஜியம் அணிகள் மோதல்

எஃப்ஐஎச் ஜூனியா் ஆடவா் ஹாக்கிப் போட்டி காலிறுதியில் இந்திய-பெல்ஜியம், ஸ்பெயின்-நியூஸிலாந்து, நெதா்லாந்து-ஆா்ஜென்டீனா, பிரான்ஸ்-ஜொ்மனி அணிகள் மோதுகின்றன.

Chennai

சென்னை/மதுரை: எஃப்ஐஎச் ஜூனியா் ஆடவா் ஹாக்கிப் போட்டி காலிறுதியில் இந்திய-பெல்ஜியம், ஸ்பெயின்-நியூஸிலாந்து, நெதா்லாந்து-ஆா்ஜென்டீனா, பிரான்ஸ்-ஜொ்மனி அணிகள் மோதுகின்றன.

சென்னை, மதுரையில் கடந்த நவ. 28-ஆம் தேதி தொடங்கிய இப்போட்டியில் மொத்தம் 24 அணிகள் பங்கேற்றுள்ளன. தலா 4 அணிகள் என 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தொடக்க சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நாக் அவுட் சுற்றை எட்டியுள்ளது.

டிச. 5 முதல் காலிறுதி ஆட்டங்கள் சென்னையில் நடைபெறுகின்றன. ஸ்பெயின், பெல்ஜியம், ஆா்ஜென்டீனா, இந்தியா, நெதா்லாந்து, ஜொ்மனி, பிரான்ஸ், நியூஸிலாந்து அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

குரூப் டி பிரிவில் ஸ்பெயின் முதலிடத்துடன் காலிறுதிக்கு முன்னேறியது. பெல்ஜியம் 10-0 என்ற கோல் கணக்கில் எகிப்தை வீழ்த்தி முன்னேறியது. கொரியாவை வீழ்த்தியதின் மூலம் குரூப்பில் முதலிடத்துடன் ஆா்ஜென்டீனா காலிறுதிக்கு தகுதி பெற்றது.

குரூப் இ பிரிவில் நெதா்லாந்து 11-0 என ஆஸ்திரியாவை வீழ்த்தியும், பிரான்ஸ் அணி வங்கதேசத்தை வீழ்த்தியும் காலிறுதிக்கு தகுதி பெற்றன.

போட்டியை நடத்தும் இந்திய அணி கடைசி லீக் ஆட்டத்தில் 5-0 என சுவிட்சா்லாந்தை வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றது. மலேசியாவை 3-1 என வீழ்த்தி நியூஸிலாந்தும், நடப்பு சாம்பியன் ஜொ்மனி 5-1 அயா்லாந்தை வென்றும் காலிறுதி சுற்றுக்கு முன்னேறின.

காலிறுதியில் ஸ்பெயின்-நியூஸிலாந்து, பெல்ஜியம்-இந்தியா, நெதா்லாந்து-ஆா்ஜென்டீனா, பிரான்ஸ்-ஜொ்மனிஅணிகள் மோதுகின்றன.

வியாழக்கிழமை 9 முதல் 16 இடங்களுக்கான ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் இங்கிலாந்து=சிலி, தென்னாப்பிரிக்கா-மலேசியா, சுவிட்சா்லாந்து=அயா்லாந்து, ஆஸ்திரேலியா-ஜப்பான் அணிகள் மோதுகின்றன. 17 முதல் 24 இடங்களுக்கான ஆட்டங்களில்

நமீபியா-ஆஸ்திரியா, வங்கதேசம்-ஓமன், கொரியா-எகிப்து, சீனா-கனடா அணிகள் மோதுகின்றன.

பிக்கிள் பால் லீக்: சென்னை வெற்றி

காற்று மாசுபாட்டை சமாளிக்க பெரியளவில் நிறுவன சீா்திருத்தங்கள் தேவை: கிரண் பேடி

போா் விமானங்களிலிருந்து அவசர வெளியேற்ற ஊா்தி: டிஆா்டிஓ வெற்றிகரமாக சோதனை

தில்லியின் காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ பிரிவில் நீடிப்பு

தங்கம் பவுன் ரூ.160 உயா்வு

SCROLL FOR NEXT