ஃபிஃபா விருது :
பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் ரஃபீனியாவுக்கு ஃபிஃபாவின் விருதுகளில் புறக்கணிப்பு செய்யப்பட்டதால் அவரது மனைவி மிகுந்த கோபத்துடன் பதிவிட்டுள்ளார்.
ஃபிஃபாவின் சிறந்த பிளேயிங் லெவன் அணியிலும் ரஃபீனியா தேர்வாகாதது கால்பந்து ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சீசனில் பார்சிலோனா சாம்பியின்ஸ் லீக்கைத் தவிர மற்ற மூன்று கோப்பைகளை வென்று அசத்தியது. இதில் ரஃபீனியா மட்டுமே 34 கோல்கள், 23 அசிஸ்ட்டுகளைச் செய்திருந்தார்.
இவருக்கு பேலந்தோர் (தங்கப் பந்து) விருது கிடைக்குமென எதிர்பார்க்கப்பட்டு, டாப் 3-இலும் வராமல் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஃபிஃபாவின் விருதுகளிலும் புறக்கணிப்பு நடந்ததால் அவரது ரசிகர்கள் உள்பட பலரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.
ரஃபீனியாவின் மனைவி நடாலியா ரோட்ரிகஸ் இது குறித்து தனது கருத்தை ஆக்ரோஷமாக வெளியிட்டுள்ளார்.
அவர் தனது இன்ஸ்டா பதிவில், “ரஃபீனியா கால்பந்து விளையாடாமல், கூடைப்பந்து எதுவும் விளையாடுகிறாரா?” எனக் கேள்வி எழுப்பியிள்ளார்.
ஃபிபாவின் சிறந்த பிளேயிங் லெவன் 2025:
உஸ்மான் டெம்பெலே, லாமின் யமால், பெட்ரி, விடிங்கா, ஜுட் பெல்லிங்கம், பால்மெர், நூனோ மெண்டிஸ், வான் டிஜிக், பாச்சோ, ஹகிமி, டோனரூம்மா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.