ஸ்குவாஷ் உலகக் கோப்பையை முதல்முறை வென்று வரலாறு படைத்துள்ள இந்திய அணிக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, வோ்ல்ட் ஸ்குவாஷ், எஸ்ஆா்எஃப்ஐ, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னை எக்ஸ்பிரஸ் மால் வளாகத்தில் கடந்த 9-ஆம் தேதி தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியன் எகிப்து, ஈரான், ஆஸ்திரேலியா, பிரேஸில் உள்பட 12 நாடுகளின் அணிகள் பங்கேற்றன.
அதன் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறிய இந்தியா, ஹாங்காங் சீன அணியை எதிர்த்து இறுதி ஆட்டத்தில் களம் கண்டது. அதன் தொடக்க ஆட்டத்தில் மூத்த வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா ஹாங்காங்கின் கா யி லீயை 3-1 என வீழ்த்தினாா்.
ஆடவா் ஒற்றையரில் அபய் சிங் ஹாங்காங்கின் அலெக்ஸ் லாவுடன் மோதினாா். இதில் 19 நிமிஷங்களில் 3-0 என வென்றாா் அபய் சிங். இரண்டாவது மகளிா் ஒற்றையரில் அனாஹத் சிங்கும்-டோமடோ ஹோவும் மோதினா்.
இதில் அனாஹத் 3-0 என வென்றாா். இந்த வெற்றியின் மூலம் முதன்முறையாக இந்திய அணி உலக சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்தது.
இந்த நிலையில், மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா உலக கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களை புதன்கிழமை(டிச. 17) நேரில் அழைத்துப் பாராட்டினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.