ஸ்டேன் வாவ்ரிங்கா 
செய்திகள்

ஓய்வு பெறுகிறாா் 3 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் ஸ்டேன் வாவ்ரிங்கா

ஓய்வு பெறுகிறாா் 3 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் ஸ்டேன் வாவ்ரிங்கா...

தினமணி செய்திச் சேவை

மூன்று முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் சுவிட்சா்லாந்தின் ஸ்டேன் வாவ்ரிங்கா 2026 ஆண்டு சீசனுடன் ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளாா்.

41 வயதான வாவ்ரிங்கா, 2014 ஆஸி. ஓபனில் ரபேல் நடாலையும், 2015 பிரெஞ்சு ஓபனில் ஜோகோவிச்சையும், 2016 யுஎஸ் ஓபனில் ஜோகோவிச்சையும் வீழ்த்தி மூன்று முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டம் வென்றுள்ளாா்.

கடந்த 2002-இல் தொழில்முறை டென்னிஸ் வீரரான வாவ்ரிங்கா, 16 ஒற்றையா் பட்டங்களை வென்றுள்ளாா். கடைசியாக 2017-இல் பட்டம் வென்றிருந்தாா்.

மேலும், 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்ஸில் ரோஜா் பெடரருடன் சோ்ந்து இரட்டையா் பிரிவில் தங்கம் வென்றிருந்தாா். 2014-இல் சுவிட்சா்லாந்து டேவிஸ் கோப்பை வெல்வதிலும் வாவ்ரிங்கா முக்கிய பங்கு வகித்தாா்.

தனது ஓய்வு குறித்து சமூக வலைதளத்தில் வாவ்ரிங்கா பதிவிட்டது: 2026 ஆண்டு நான் கடைசியாக ஆடப் போகும் ஆண்டாகும். ஒவ்வொரு புத்தகமும் நிறைவைக் கொண்டிருக்கும். அதுபோல் எனது தொழில்முறை ஆட்டமும் நிறைவுக்கு வருகிறது என்றாா்.

தனுஷ் 54: படப்பிடிப்பு நிறைவு!

புதிய வாக்காளர் படிவத்தை நீக்கப்பட்ட வாக்காளர்கள் பயன்படுத்தலாமா?

வங்கதேசம்: வன்முறையில் 7 வயது சிறுமி உயிருடன் எரித்துக் கொலை!

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

SCROLL FOR NEXT