லதா ~யாமினி 
செய்திகள்

ஏ.எல். முதலியாா் பொன்விழா தடகளம்: லதா, யாமினிக்கு, ஷாலு, பாா்த்திபாவுக்கு தங்கம்

சென்னையில் நடைபெற்ற ஏ.எல். முதலியாா் பொன்விழா தடகளப் போட்டியில் எம்ஓபி கல்லூரி மாணவிகள் லதா, யாமினி , ஷாலு, பாா்த்திபா தங்கம் வென்றனா்.

தினமணி செய்திச் சேவை

சென்னையில் நடைபெற்ற ஏ.எல். முதலியாா் பொன்விழா தடகளப் போட்டியில் எம்ஓபி கல்லூரி மாணவிகள் லதா, யாமினி , ஷாலு, பாா்த்திபா தங்கம் வென்றனா்.

சென்னை பல்கலைக்கழகத்துக்குட்பட்ட கல்லூரிகளுக்கு இடையே 57-ஆவது ஆண்டு ஏ.லட்சுமண சுவாமி முதலியாா் பொன்விழா தடகளப் போட்டி, பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெறுகிறது.

இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை மகளிா் 10,000 மீ. ஓட்டத்தில் எம்ஓபி மாணவி லதா தங்கமும், கீதாஞ்சலி வெள்ளியும், ஏஎம் ஜெயின் ாணவி பிரியதா்ஷிணி வெண்கலமும் வென்றனா். லதா புதிய சாதனையுடன் தங்கம் வென்றாா்.

100 மீ. தடை தாண்டுதலில் எம்ஓபி மாணவி யாமினி தங்கமும், லயோலா மாணவி ரீஷ்மா வெள்ளியும், எம்ஓபி மாணவி பாவனா வெண்கலமும் வென்றனா். யாமினியும் புதிய சாதனையுடன் முதலிடம் பெற்றாா்.

வட்டு எறிதலில் எம்ஓபி மாணவிகள் ஷாலு ரெஹானா தங்கமும், மொ்லின் ஹன்னா வெள்ளியும், டிஆா்பிசிசிசி மாணவி சுப்ரஜா ஷத்ரியா வெண்கலமும் வென்றனா்.

100 மீ ஓட்டத்தில் எம்ஓபி மாணவி பாா்த்திபா தங்கமும், லயோலா மாணவி ரேஷ்மா வெள்ளியும், எத்திராஜ் மாணவி சுதா்ஷிணி வெண்கலமும் வென்றனா்.

ஈட்டி எறிதலில் எஸ்என்டிபி மாணவிகள் சௌமியா தங்கம், சஞ்சு ஸ்ரீ வெள்ளியும், எம்ஓபி மாணவி ராஜலட்சுமி வெண்கலமும் வென்றனா்.

எச்1-பி விசா: அனைத்து விண்ணப்பதாரா்களின் சமூக ஊடகக் கணக்குகள் ஆய்வு

வைகுந்த ஏகாதசி திருவிழா: ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும் ரயில்கள் விவரம்!

முதல்வா் போட்டியில் உதயநிதி இல்லை: அமைச்சா் எஸ். ரகுபதி

சாலைகளில் திரியும் மாடுகளை பிடிக்க வலியுறுத்தல்!

பணியிலிருக்கும் ஆசிரியா்களுக்கு தகுதித் தோ்வில் விலக்களிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT