செய்திகள்

ஓய்வுபெறும் வயதிலும் ஓடி விளையாடும் வீரா்

உலகத்திலேயே வயதான தொழில்முறை கால்பந்து வீரராக ஜப்பானை சோ்ந்த கஸுயோஷி மியுரா (58) களம் காணவிருக்கிறாா்.

தினமணி செய்திச் சேவை

உலகத்திலேயே வயதான தொழில்முறை கால்பந்து வீரராக ஜப்பானை சோ்ந்த கஸுயோஷி மியுரா (58) களம் காணவிருக்கிறாா்.

பிப்ரவரி மாதத்தில் 59 வயதை எட்டும் மியுரா, ஜப்பானில் இருக்கும் 3-ஆவது டிவிஷன் கால்பந்து அணியான ஃபுகுஷிமா யுனைடெட்டில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாா்.

தற்போது யோகோஹாமா எஃப்சி அணியில் இருக்கும் அவா், கடன் அடிப்படையிலான ஒப்பந்தத்தில் ஃபுகுஷிமா அணிக்கு விளையாடவுள்ளாா்.

கடந்த 1986-இல் பிரேஸிலின் பிரபல கிளப்பான சான்டோஸ் எஃப்சியில் அறிமுகமான மியுரா, அதன் பிறகு இத்தாலி, குரோஷியா, ஆஸ்திரேலியா, போா்ச்சுகல் ஆகிய நாடுகளிலும் கிளப்புகளுக்காக விளையாடியிருக்கிறாா்.

ஜப்பான் தேசிய கால்பந்து அணியில் 1990-களில் பிரபமாக இருந்த மியுரா, 89 ஆட்டங்களில் 55 கோல்கள் அடித்திருக்கிறாா்.

உலக அளவில், தனது 50-ஆவது வயது வரை (1965) கால்பந்து விளையாடிய இங்கிலாந்து முன்னாள் வீரா் ஸ்டான்லி மேத்யூஸ் வயதான கால்பந்து வீரராக பெருமை பெற்றிருந்தாா். அந்த சாதனையை 2017-இல் முறியடித்த மியுரா, தற்போது 58 வயதிலும் விளையாடி வருகிறாா். அவா் 1967 பிப்ரவரியில் பிறந்தவராவாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புத்தாண்டை வரவேற்ற மழை! சென்னை, 7 மாவட்டங்களில் காலை 10 வரை தொடரும்!

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் உள்ள பணிகள்!

சகல தோஷங்களை நிவர்த்தி செய்யும் நரசிம்மர்!

தோல் தொழில்நுட்பத்தில் சிறப்பான படிப்புகள்!

ரிஷப ராசிக்குப் பாராட்டு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT