கார்லோஸ் அல்கராஸ் படம்: ஏபி
செய்திகள்

கங்காரு உருவத்தை பச்சை குத்த திட்டமிட்டிருக்கும் கார்லோஸ் அல்கராஸ்!

பிரபல டென்னிஸ் வீரர் கார்லோஸ் அல்கராஸ் கங்காரு உருவத்தை தனது உடலில் பச்சை குத்த உள்ளார்.

DIN

பிரபல டென்னிஸ் வீரர் கார்லோஸ் அல்கராஸ் கங்காரு உருவத்தை தனது உடலில் பச்சை குத்த உள்ளதாகக் கூறியுள்ளார்.

கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை கொண்டாடும் விதமாக நடப்பு ஆஸ். ஓபன் தொடரை வென்றால் தனது உடலில் கங்காரு படத்தை பச்சை குத்த தயாராக இருப்பதாக கார்லோஸ் அல்கராஸ் கூறியுள்ளார்.

21 வயதாகும் இளம் டென்னிஸ் வீரர் ஆஸி. ஓபன் தொடரில் 3வது சுற்றில் 6-2, 6-4, 6-7 (3), 6-2 என போர்ச்சுகளின் நுனோ போர்ஹெஸை வென்றார்.

வெற்றிக் களிப்பில் அல்கராஸ்.

நான்காவது சுற்று ஞாயிற்றுக் கிழமையும் காலிறுதி, அரையிறுதி, இறுதிச் சுற்றுகள் முறையே ஜன. 21, 24, 26ஆம் தேதிகளில் நடைபெற உள்ளன.

கார்லோஸ் அல்கராஸ் பச்சை குத்துவது முதல்முறை அல்ல. ஏற்கனவே 2022இல் தனது முதல் பட்டமான யுஎஸ் ஓபன், இரண்டு விம்பிள்டன் வெற்றியை குறிக்க ஸ்ட்ராபெர்ரியையும் கடந்தாண்டு பிரென்சு ஓபன் வெற்றியைக் கொண்டாடும் விதமாகவும் ஈபிள் டவரினை பச்சை குத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஜன.26ஆம் தேதி ஒற்றை ஆளாக களத்தில் நின்றால் என்ன செய்வீர்கள் எனக் கேட்டதற்கு அல்காரஸ், “நிச்சயமாக கங்காருவை பச்சை குத்துவேன். இங்குதான் நான் கோப்பையை ஏந்தாமல் இருக்கிறது. அதற்கான திட்டத்துடந்தான் வந்துள்ளேன்” என மிகப் பெரிய புன்னகையுடன் கூறினார்.

கடந்தாண்டு அல்காரஸ் காலிறுதியில் தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது. ”முடிந்த அளவுக்கு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வெல்வதுதான் எனது முதன்மை நோக்கம்” என அல்காரஸ் கூறியுள்ளார்.

தற்போது, டென்னிஸ் தரவரிசையில் கார்லோஸ் அல்கராஸ் 3ஆவது இடத்தில் இருக்கிறார். யானிக் சின்னர் முதலிடத்திலும் ஸ்வரேவ் 2ஆம் இடத்திலும் ஜோகோவிச் 7ஆவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆரை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்? பிரதமர் விளக்கம்

என்ஹெச்சிபிசி 2-வது நீர்மின் திட்டம் நாளை மறுநாள் தொடக்கம்!

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT