கால்பந்து உலகக் கோப்பைக்காக 30 லட்சம் தெருநாய்களை கொல்ல திட்டம் 
செய்திகள்

கால்பந்து உலகக் கோப்பைக்காக 30 லட்சம் தெருநாய்களை கொல்ல மொராக்கோ திட்டம்!

கால்பந்து உலகக் கோப்பைக்காக 30 லட்சம் தெருநாய்களை கொல்ல மொராக்கோ திட்டமிட்டுள்ளது.

DIN

கால்பந்து உலகக் கோப்பைக்காக 30 லட்சம் தெருநாய்களை கொல்ல மொராக்கோ திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலால் விலங்கு ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.

2030ஆம் ஆண்டுக்கான கால்பந்து உலகக் கோப்பை போட்டிகள் மொராக்கோ, போர்ச்சுகள் உள்பட 6 நாடுகளில் நடைபெறுமென ஃபிபா அதிகாரபூர்வமாக சமீபத்தில் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் உலக அளவில் புகழ்பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலரான டாக்டர். ஜேன் காடெல் மொராக்காவின் 30 லட்சம் நாய்களை கொல்லும் கொடுஞ்செயல் திட்டத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஃபிபாவுக்கு அவர் கண்டனம் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். மேலும் ஃபிபா உடனடியாக தலையிட இதை நிறுத்த வேண்டுமெனவும் கூறியுள்ளார்.

ஐஏசி (சர்வதேச விலங்குகள் நல அமைப்பு) ஃபிபாவின் அறிவிப்பில் இருந்து மொராக்கோ ஒவ்வொரு வருடமும் 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டிருக்கிறது. ஊசிகள் பயன்படுத்தியும் கொடுமையான பூச்சிக்கொல்லிகளையும் பயன்படுத்தி இந்த கொடுமையான செயல்களில் மொராக்கோ அரசு களமிறங்கியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது.

கடைசியாக கத்தாரில் 2022இல் நடந்த உலகக் கோப்பையில் ஆர்ஜென்டீனா கோப்பையை வென்றது.

உருகுவே 1930இல் முதல்முறையாக போட்டிகளை நடத்தி சாம்பியன் பட்டம் பெற்றது. தற்போது நூற்றாண்டை முன்னிட்டு உருகுவே நாட்டிலும் ஒரு போட்டி நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT