முகப்பு
செய்திகள்

கிளப் உலகக் கோப்பை: பிஎஸ்ஜி, ரியல் மாட்ரிட் அரையிறுதிக்கு முன்னேற்றம்!

கிளப் உலகக் கோப்பை காலிறுதியில் வென்ற அணிகள் குறித்து...

Updated On : 6 ஜூலை, 2025 at 5:37 AM
பிஎஸ்ஜி, ரியல் மாட்ரிட் அரையிறுதிக்கு முன்னேற்றம். - படங்கள்: கிளப் உலகக் கோப்பை
பகிர்:

கிளப் உலகக் கோப்பையில் ரியல் மாட்ரிட், பிஎஸ்ஜி அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

ஃபிஃபா நடத்தும் கிளப் உலகக் கோப்பை போட்டிகள் அமெரிக்காவில் நடைபெற்று வருகின்றன.

காலிறுதியில் ரியல் மாட்ரிட்,  டார்ட்மண்ட்  அணிகள் மோதின. இந்தப் போடியில் ரியல்மாட்ரிட்டின் கான்ஸாலோ கார்ஸியா 10-ஆவது நிமிஷத்திலும் பிராங் கார்ஸியா 20-ஆவது நிமிஷத்திலும் கோல் அடித்தார்கள்.

இரண்டாம் பாதியிலும் டார்ட்மண்ட் கோல் அடிக்கவில்லை. பின்னர் 90+2- ஆவது நிமிஷத்தில் ஒரு கோல் அடிக்க எம்பாபே 90+4-ஆவது நிமிஷத்தில் பதிலடி கொடுத்தார்.

இறுதியில் பெனால்டியில் 90+8ஆவது நிமிஷத்தில் டார்ட்மண்ட் கோல் அடித்தும் பயனில்லாமல் சென்றது. 3-2 என ரியல் மாட்ரிட் வென்றது.

மற்றுமொரு காலிறுதியில் பிஎஸ்ஜி, பயர்ன் மியூனிக் அணிகள் மோதின. இதில் பிஎஸ்ஜி அணி 2-0 என வென்றது.

இரு அணிகளுமே முதல் பாதியில் கோல் அடிக்கவில்லை. இரண்டாம் பாதியில் டியூ 78-ஆவது நிமிஷத்திலும், டெம்பேலே 90+6-ஆவது நிமிஷத்திலும் கோல் அடித்தார்கள்.

ரியல் மாட்ரிட் - பிஎஸ்ஜி அணிகள் அரையிறுதியில் வரும் ஜூலை 10ஆம் தேதி இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு போட்டி நடைபெறவிருக்கிறது.

மற்றுமொரு அரையிறுதியில் செல்ஸி - ஃபுளுமினென்ஸ் அணிகள் வரும் ஜூலை 9-ஆம் தேதி மோதுகின்றன.

summary

Real Madrid and PSG advanced to the semi-finals of the Club World Cup.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.