கோப்புப்படம்  AP
செய்திகள்

முதல்முறையாக மேக்னஸை தோற்கடித்த குகேஷ்!

உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்செனை இந்திய வீரர் டி.குகேஷ் தோற்கடித்திருப்பது பற்றி...

DIN

நார்வே செஸ் போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்செனை இந்திய வீரர் டி.குகேஷ் தோற்கடித்துள்ளார்.

நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி ஸ்டாவஞ்சர் நகரில் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியின் ஆடவர் பிரிவில் இந்தியா சார்பில் டி. குகேஷ், அர்ஜுன் எரிகைசி பங்கேற்றுள்ளனர்.

இந்த போட்டியின் ஆறாவது சுற்றில், 5 முறை உலக சாம்பியனான நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்செனை குகேஷ் எதிர்கொண்டார்.

ஆட்டத்தின் தொடக்கம் முதல் மேக்னஸ் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், இறுதியில் சமர்த்தியமாக விளையாடிய குகேஷ் வெற்றியை பதிவு செய்தார்.

இந்த தோல்வியால் மேஜையைத் தட்டி தனது அதிருப்தியை மேக்னஸ் வெளிப்படுத்தினார். பின்னர் குகேஷுக்கு வாழ்த்து தெரிவித்து புறப்பட்டுச் சென்றார்.

உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸை குகேஷ் முதல்முறையாக வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சப்தமே இல்லாமல் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய ஸ்விக்கி!

அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

தினம் தினம் திருநாளே!

மொடக்குறிச்சி அருகே ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியா் வீட்டில் 17 பவுன், ரூ.1 லட்சம் திருட்டு

கொள்முதல் நிலையம் திறக்காததால் மழையில் நனைந்து நெல்மணிகள் முளைத்து சேதம்

SCROLL FOR NEXT