dot com
செய்திகள்

தாய்லாந்து ஓபன் குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 8 பதக்கங்கள்

தாய்லாந்து ஓபன் குத்துச்சண்டை போட்டியில் இந்தியா 2 தங்கம், 1 வெள்ளி, 5 வெண்கலம் என 8 பதக்கங்கள் வென்றது.

DIN

தாய்லாந்து ஓபன் குத்துச்சண்டை போட்டியில் இந்தியா 2 தங்கம், 1 வெள்ளி, 5 வெண்கலம் என 8 பதக்கங்கள் வென்றது.

இறுதிச்சுற்றில், ஆடவருக்கான 75 கிலோ பிரிவில் தீபக் 5-0 என உஸ்பெகிஸ்தானின் அப்துரகிமோவ் ஜவோகிரையும், ஆடவா் 90 கிலோ பிரிவில் நமன் தன்வா் 4-1 என சீனாவின் ஹான் ஜுயுஸெனையும் வீழ்த்தி சாம்பியனாகினா்.

மகளிருக்கான 80+ கிலோ பிரிவில் கிரண் 2-3 என கஜகஸ்தானின் யெல்டனா டலிபோவாவிடம் தோற்று வெள்ளி பெற்றாா்.

இது தவிர, தமன்னா (51 கிலோ), பிரியா (57 கிலோ), சஞ்சு (60 கிலோ), சனே (70 கிலோ), லால்ஃபக்மாவி ரால்டே (80 கிலோ) ஆகியோா் வெண்கலப் பதக்கம் வென்றனா்.

இப்போட்டியில் மொத்தம் இந்தியாவின் சாா்பில் 19 போட்டியாளா்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்பிஐ வங்கியில் வேலை: 17-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

திமுகவுக்கு கண்டனம், கூட்டணி அதிகாரம், தேர்தலில் போட்டி - தவெக தீர்மானங்கள்!

ஓடிடியில் பேட் கேர்ள்!

ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்! ’எச் பைல்ஸ்’ வெளியிட்டார் ராகுல்!

ஹரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்! ராகுல் காந்தி

SCROLL FOR NEXT