கிறிஸ்டியானோ ரொனால்டோ படம்: ஏபி
செய்திகள்

1,000 கோல்களை நோக்கி..! 93.7% முடித்த ரொனால்டோ!

கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் 937-ஆவது கோல் குறித்து...

DIN

போர்ச்சுகலைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது 1,000 கோல்களை நோக்கி நகர்ந்து வருகிறார்.

40 வயதான ரொனால்டோ, “1000 கோல்கள் அடிப்பது எனது கனவு” என 900 கோல்களை நிறைவு செய்தபோது கூறியிருந்தார். சொன்னதுபோலவே அதை நிறைவேற்றி விடுவார் போலிருக்கிறது.

இன்று காலை நடைபெற்ற போட்டியில் நேஷ்னல் லீக்கில் ஜெர்மனிக்கு எதிராக 68-ஆவது நிமிஷத்தில் ரொனால்டோ கோல் அடித்து அசத்தினார்.

25 ஆண்டுக்குப் பிறகு ஜெர்மனியை வீழ்த்தியது. இதன் மூலம் நேஷன்ல் லீக் இறுதிப் போட்டிக்கும் போர்ச்சுகல் முன்னேறியுள்ளது.

இதன்மூலம் நாட்டிற்காக தனது 137-ஆவது கோலை நிறைவு செய்துள்ளார்.

ஒட்டுமொத்தமாக தனது 937 கோலை அடித்துள்ளார். அதாவது, 1000 கோல்கள் என்பதில் 93.7 சதவிகித கோல்களை நிறைவு செய்துள்ளார்.

ரொனால்டோவின் ஜெர்ஸி எண். 7ஆக இருக்கிறது. 93.7% என அவரது விருப்பமான எண்ணுடன் முடிந்ததை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

40 வயதிலும் இந்தமாதிரி ஃபிட்னஸ் உடன் விளையாடுவது பலருக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழிலாளி வீட்டில் தீ விபத்து: பொருள்கள் எரிந்து சேதம்

புதிய ஊதிய உயா்வை அமல்படுத்த வேண்டும்: கூட்டுறவு வங்கி ஊழியா் சம்மேளனம்

Vijayக்கும் திமுகவுக்கு ரகசிய தொடர்பு?; திருமா | செய்திகள்: சில வரிகளில் | 02.10.25

அன்பிற்கினியாள் ✨🌸... ரஷ்மிகா!

மகளிர் உலகக் கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்தி வங்கதேசம் அசத்தல்!

SCROLL FOR NEXT