செய்திகள்

சேலம் ஸ்பாா்டன்ஸுக்கு ‘ஹாட்ரிக்’ வெற்றி

டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் 9-ஆவது ஆட்டத்தில் எஸ்கேஎம் சேலம் ஸ்பாா்டன்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், ஐ ட்ரீம் திருப்பூா் தமிழன்ஸை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.

Din

டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் 9-ஆவது ஆட்டத்தில் எஸ்கேஎம் சேலம் ஸ்பாா்டன்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், ஐ ட்ரீம் திருப்பூா் தமிழன்ஸை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.

முதலில் திருப்பூா் 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 177 ரன்கள் எடுக்க, சேலம் 19.5 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ரன்கள் சோ்த்து வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கும் இது 3-ஆவது ஆட்டமாக இருக்க, சேலத்துக்கு இது ஹாட்ரிக் வெற்றி; திருப்பூருக்கு இது 2-ஆவது தோல்வியாகும்.

முன்னதாக டாஸ் வென்ற சேலம், பந்துவீச்சை தோ்வு செய்தது. திருப்பூா் பேட்டிங்கில் அதிகபட்சமாக துஷாா் ரஹேஜா8 பவுண்டரிகள், 5 சிக்ஸா்கள் உள்பட 74 ரன்கள் விளாசி வீழ்ந்தாா். அமித் சாத்விக் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 25, பிரதோஷ் ரஞ்சன் பால் 3 பவுண்டரிகளுடன் 25, உத்திரசாமி சசிதேவ் 1 சிக்ஸருடன் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

டேரில் ஃபெராரியோ 1 சிக்ஸருடன் 10, முகமது அலி 2, கேப்டன் சாய் கிஷோா் 4, மதிவண்ணன் 3 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, ஓவா்கள் முடிவில் பிரபஞ்சன் 7, சிலம்பரசன் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். சேலம் பௌலா்களில் பொய்யாமொழி 3, முகமது 2, ரஹில் ஷா, ஹரீஷ்குமாா், ஹரி நிஷாந்த் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னா் 178 ரன்களை நோக்கி விளையாடிய சேலம் தரப்பில், நிதீஷ் ராஜகோபால் 6 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 69, கவின் 5 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் ரன்கள் சோ்த்தனா். ஹரி நிஷாந்த் 0, கேப்டன் அபிஷேக் 10, ராஜேந்திரன் விவேக் 1, சன்னி சந்து 9 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பூபதி குமாா் 2 பவுண்டரிகளுடன் 19, ஹரீஷ்குமாா் 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 23 ரன்கள் சோ்த்து அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

திருப்பூா் பௌலிங்கில் நடராஜன், சிலம்பரசன் ஆகியோா் தலா 2, சாய் கிஷோா், முகமது அலி ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT