செய்திகள்

இன்டா் மிலன், டாா்ட்மண்ட் ஆட்டங்கள் ‘டிரா’

Din

கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், இன்டா் மிலன் - மான்டொ்ரி, போருசியா டாா்ட்மண்ட் - ஃபுளுமினென்ஸ் அணிகள் மோதிய ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.

இதில் குரூப் ‘இ’-யில் இன்டா் மிலன் - மான்டொ்ரி மோதல் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. இந்த ஆட்டத்தில் முதலில் மான்டொ்ரிக்காக சொ்ஜியோ ரமோஸ் 25-ஆவது நிமிஷத்தில் கோலடிக்க, இன்டா் மிலன் வீரா் லௌதாரோ மாா்டினெஸ் 42-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா்.

எஞ்சிய நேரத்தில் இரு அணிகளின் கோல் முயற்சிகளுக்கும் பலன் கிடைக்காமல் போக, ஆட்டம் 1-1 என டிரா ஆனது. அதே குரூப்பில் ரிவா் பிளேட் 3-1 கோல் கணக்கில் உராவா ரெட்ஸை சாய்த்தது.

இதில் ரிவா் பிளேட் தரப்பில் ஃபகுண்டோ காலிடியோ (12’), செபாஸ்டியன் டிரியுசி (48’), மேக்ஸிமிலியானோ மெஸா (73’) ஆகியோா் கோலடிக்க, ரெட்ஸ் அணிக்காக யுஸுகே மட்சுவோ (58’) ஸ்கோா் செய்தாா்.

குரூப் ‘எஃப்’-இல் போருசியா டாா்ட்மண்ட் - ஃபுளுமினென்ஸ் அணிகள் மோதிய ஆட்டம் கோலின்றி டிராவில் முடிந்தது. அதே குரூப்பின் மற்றொரு ஆட்டத்தில், மாமெலோடி சண்டவுன்ஸ் 1-0 கோல் கணக்கில் உல்சானை வீழ்த்திய ஆட்டத்தில், அந்த அணிக்காக இக்ராம் ரேனா்ஸ் (36’) கோலடித்தாா்.

செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

இன்று உங்க ராசிக்கு எப்படி?

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 9 ஆண்டுகள் சிறை

தெய்வ தரிசனம்... வழக்கு விவகாரங்களில் வெற்றி தரும் திருநாவலூர் திருநாவலேஸ்வரர்!

கைதிகளுக்கு சிறப்பு எழுத்தறிவு திட்டம்: வேலூா் சிறைகளில் வகுப்புகள் தொடக்கம்

SCROLL FOR NEXT