நீரஜ் சோப்ரா. 
செய்திகள்

ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் போட்டி: தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா!

ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றதைப் பற்றி...

DIN

ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் சர்வதேச ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.

ஒலிம்பிக்கில் தங்கம், வெள்ளி என இரண்டு முறை பதக்கம் வென்ற இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உலக தடகள கான்டினென்டல் டூர் பிரிவு ஏ-வில் ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக்கில் தங்கம் வென்றார். மொத்தம் 9 பேர் கலந்துகொண்ட இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே நீரஜ் சோப்ரா ஆதிக்கம் செலுத்தினார்.

நீரஜ் சோப்ரா தனது சிறந்த நிலையான 90.23 மீட்டரை எட்டத் தவறிய போதிலும், 85.29 மீட்டருக்கு ஈட்டி எறிந்து முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தைத் தனதாக்கினார்.

தென்னாப்பிரிக்காவின் டவ் ஸ்மிட் 84.12 மீட்டர் தூரம் எறிந்து இரண்டாவது இடத்தைப் பிடித்து வெள்ளிப்பதக்கத்தைக் கைப்பற்றினார். இரண்டு முறை உலக சாம்பியனான கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 83.63 மீட்டர் தூரம் எறிந்து மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

பாரீஸில் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் தங்கம் வென்றவரான தாமஸ் ரோஹ்லர் 79.18 மீட்டர் தூரம் எறிந்து 7-வது இடத்தைப் பிடித்தார்.

இதையும் படிக்க... ஈரானின் அணுசக்தி தளத்தை பங்கர் பஸ்டர் குண்டுகள் முழுமையாக அழிக்கவில்லை! - உளவுத்துறை பரபரப்பு தகவல்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தான்: நள்ளிரவில் துப்பாக்கிச் சண்டை! 15 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

1 ரன்னில் மீண்டும் ஆட்டமிழந்த லபுஷேன்..! ஸ்மித் இல்லாமல் தடுமாறும் ஆஸி.!

வார இறுதி நாள்களை வீணாக்குகிறீர்களா? இந்த 5 வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்!

சமயபுரம் மாரியம்மன் கோயில் தங்க நகைகளை அளவிடும் பணி தொடக்கம்

வார பலன்கள் - ரிஷபம்

SCROLL FOR NEXT