ககிசோ ரபாடா (கோப்புப் படம்) X | Kagiso Rabada
செய்திகள்

ககிசோ ரபாடாவுக்கு அனுமதி

போதை மருந்து பயன்படுத்திய விவகாரத்தில் குஜராத் டைட்டன்ஸின் தென்னாப்பிரிக்க பௌலர் சுகிசோ ரபாடாவுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது.

DIN

போதை மருந்து பயன்படுத்திய விவகாரத்தில் குஜராத் டைட்டன்ஸின் தென்னாப்பிரிக்க பௌலர் சுகிசோ ரபாடாவுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. அவர் விளையாடத் தயாராக இருப்பதாகவும் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஜனவரியில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற எஸ்ஏடி 20 லீக் கிரிக்கெட்டில் எம்ஐ கேப்டவுன் அணிக்காக விளையாடியபோது பொழுதுபோக்கு அடிப்படையில் ரபாடா போதை மருந்து பயன்படுத்தியதாக அறியப்படுகிறது.

இந்நிலையில் அவர் ஊக்கமருந்து பரிசோதனையில் கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி தோல்வியடைந்தது தெரியவந்தது. இதையடுத்து, ரபாடா தனிப்பட்ட காரணங்களுக்காக தென்னாப்பிரிக்கா திரும்பியதாக குஜராத் அணி நிர்வாகம் அறிவித்தது.

ஊக்கமருந்து பரிசோதனையில் தோல்வியடைந்த ரபாடாவுக்கு ஒரு மாதம் தடை விதிக்கப்பட்டது. அந்தத் தடைக் காலம் தற்போது முடிவடைந்த நிலையில், இந்த ஒரு மாத காலத்தின்போது தென்னாப்பிரிக்காவிலுள்ள விளையாட்டுக்கான ஊக்கமருந்து தடுப்பு அமைப்பில் போதை மருந்து பயன்பாடு குறித்த விழிப்புணர்வு கலந்தாலோசனைகளில் அவர் பங்கேற்றார்.

தற்போது அதையும் அவர் நிறைவு செய்த நிலையில், ஐபிஎல் போட்டியில் பங்கேற்க அவர் தயாராக இருப்பதாக குஜராத் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பொதுவாக போதைப்பொருள் பயன்படுத்திய விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு அதிகபட்சம் 4 ஆண்டுகள் வரை தடை விதிக்கப்படலாம். எனினும், போட்டிகளில் பங்கேற்காதபோது அதை பயன்படுத்தியதாகவோ, போட்டிகளில் செயல்திறனை அதிகரிக்க அதை பயன்படுத்தவில்லை என்றோ நிரூபித்தால் தடைக்காலம் 3 மாதங்களாகக் குறைக்கப்படலாம். போதைப்பொருள் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு சுலந்தாலோசனையில் பங்கேற்றால் அந்தத் தடைக்காலம் மேலும் குறையும் என்ப து குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடியரசு துணைத் தலைவா் தோ்தல்: பிஆா்எஸ் ஆதரவு யாருக்கு?

60,000 ரிசா்வ் வீரா்களுக்கு இஸ்ரேல் அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் ராஜீவ் காந்தி பிறந்த நாள்

வழிகாட்டுதல் அறிக்கை

காப்பீடு பிரீமியம் தொகைக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்க திட்டம்: வருவாய் பாதிக்கும் என மாநிலங்கள் கருத்து

SCROLL FOR NEXT