மான்செஸ்டர் யுனைடெட் அணி படம்: ஏபி
செய்திகள்

தெற்காசிய கால்பந்து அணியுடன் தோல்வியுற்ற மான்செஸ்டர் யுனைடெட்..! புலம்பும் ரசிகர்கள்!

மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணி தென் கிழக்கு ஆசிய அணியுடன் தோல்வியுற்றது குறித்து...

DIN

இங்கிலாந்தின் பிரபல கால்பந்து அணியான மான்செஸ்டர் யுனைடெட் எஃப்சி தென் கிழக்கு ஆசிய கால்பந்து அணியுடன் தோல்வியுற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜாலில் தேசிய திடலில்  நடைபெற்ற நட்பு ரீதியான ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் எஃப்சியும் தென்கிழக்கு ஆசிய ஆல்-ஸ்டார்ஸ் அணியும் மோதின.

இந்தப் போட்டியின் 71ஆவது நிமிஷத்தில் மியான்மரைச் சேர்ந்த மௌங் மௌங் இல்வின் கோல் அடித்து அசத்தினார்.

கடைசிவரை கோல் அடிக்க முடியாமல் மான்செஸ்டர் யுனைடெட் 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வியுற்றது.

பிரீமியர் லீக்கில் மான்செஸ்டர் யுனைடெட் அணி 15-ஆவது இடத்தில் இந்த சீசனை முடித்தது. இதுதான் அந்த அணியின் மோசமான தரநிலையாகும்.

சமீபத்தில் ஐரோப்பிய லீக் இறுதிப் போட்டியிலும் தோல்வியுற்றது. அடுத்த சில நாள்களிலே இந்தப் போட்டியிலும் தோல்வியுற்றது யுனெடட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கால்பந்து ரசிகர்கள் மான்செஸ்டர் யுனடெட் அணியை நமது அணியேக்கூட எளிதாக வீழ்த்திவிடுமென சமூக வலைதளத்தில் கிண்டல் செய்து வருகின்றனர்.

ஹாங்காங் உடன் நாளை (மே.30) மான்செஸ்டர் யுனைடெட் அணி மோதவிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT