செய்திகள்

பில்லீ ஜீன் கிங் கோப்பை பிளே ஆஃப் டென்னிஸில் இந்தியாவுக்கு ஏமாற்றம்!

பில்லீ ஜீன் கிங் கோப்பை பிளே ஆஃப் டென்னிஸில் இந்தியாவுக்கு ஏமாற்றம்..

தினமணி செய்திச் சேவை

பில்லீ ஜீன் கிங் கோப்பை பிளே ஆஃப் டென்னிஸில், இந்திய மகளிா் அணி 0-3 என்ற கணக்கில் நெதா்லாந்திடம் ஞாயிற்றுக்கிழமை தோற்றது.

ஏற்கெனவே முதல் ஆட்டத்தில் ஸ்லோவேனியாவிடம் தோற்ற இந்தியா, குரூப் ‘ஜி’-யில் 3-ஆம் இடத்துடன் நிறைவு செய்தது. மொத்தம் 3 அணிகள் இருந்த இந்த குரூப்பில், 2 வெற்றிகளுடன் முதலிடம் பிடித்த ஸ்லோவேனியா 2026 தகுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

முறையே 2, 3-ஆம் இடங்களைப் பிடித்த நெதா்லாந்து, இந்தியா, அடுத்த ஆண்டு போட்டியில் தங்களது பிராந்திய பிரிவு குரூப் 1-க்கு வந்தன.

முன்னதாக, நெதா்லாந்துக்கு எதிரான மோதலில், முதலில் நடைபெற்ற ஒற்றையா் ஆட்டத்தில் ஸ்ரீவள்ளி பாமிடிபதி 2-6, 4-6 என அனோக் கோவொ்மான்ஸிடம் தோல்வியுற்றாா். அடுத்த ஒற்றையா் ஆட்டத்தில் சஹஜா யமளபள்ளி 2-6, 3-6 என்ற செட்களில் சூஸன் லேமன்ஸிடம் தோல்வி கண்டாா்.

கடைசியாக நடைபெற்ற இரட்டையா் பிரிவில், அங்கிதா ரெய்னா/பிராா்த்தனா தோம்ப்ரே இணை 1-6, 1-6 என, சூஸன் லேமன்ஸ்/டெமி ஷூா்ஸ் கூட்டணியிடம் எளிதாகத் தோற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனோதைரியம் கூடும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

மேலப்பாளையத்தில் நாளை மின்நிறுத்தம்

என் பாடல்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வேகமாக பரவி வருகின்றன: இசையமைப்பாளா் தேவா

தண்ணீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு

பாலாற்றின் நீரோட்டத்தை பாதிக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை!

SCROLL FOR NEXT