செய்திகள்

இந்திய கலப்பு இணைகளுக்கு தங்கம், வெண்கலப் பதக்கங்கள்

ஜப்பானில் நடைபெறும் டெஃப்லிம்பிக்ஸ் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் இந்திய கலப்பு இணைகள் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்கள் வென்று அசத்தின.

தினமணி செய்திச் சேவை

ஜப்பானில் நடைபெறும் டெஃப்லிம்பிக்ஸ் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் இந்திய கலப்பு இணைகள் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்கள் வென்று அசத்தின.

10 மீட்டர் ஏர் ரைஃபிள் கலப்பு அணிகள் பிரிவில், தனுஷ் ஸ்ரீகாந்த், மஹித் சந்து கூட்டணி 17-7 என்ற கணக்கில் தென் கொரியாவின் ஜியோன் டியான், கிம் வூரிம் இணையை வீழ்த்தி தங்கத்தைக் கைப்பற்றியது. இதில் தொடக்கத்திலேயே 4-0 என முன்னிலை பெற்ற தனுஷ், மஹித் ஜோடி, தென் கொரிய இணையுடன் நல்லதொரு இடைவெளி இருக்கும் வகையிலேயே இறுதி வரை முன்னிலையை தக்கவைத்து வெற்றி பெற்றது.

வெண்கலப் பதக்கத்துக்கான சுற்றில், முகமது முர்டாஸô வனியா, கோமல் மிலிந்த் வாக்மேர் ஜோடி 16-12 என்ற வகையில் உக்ரைனின் வயோலெடா லைகோவா, அலெக்ஸôண்டர் கொஸ்டிக் பார்ட்னர்ஷிப்பை வீழ்த்தியது. இந்திய - உக்ரைன் இணை 4-4 என இந்த மோதலை தொடங்கிய நிலையில், இடையே உக்ரைன் ஜோடி 7-5 என முன்னிலை பெற்றது.

ஆனாலும் விடாமல் துரத்திய இந்திய ஜோடி, 7-7, 8-8, 10-10 என பின் தொடர்ந்து, ஒரு கட்டத்தில் முன்னிலையும் கண்டு, இறுதியில் வெற்றியை தனதாக்கி பதக்கத்தைக் கைப்பற்றியது.

தற்போது பதக்கம் வென்றுள்ள இந்த இந்திய இணைகளை சேர்ந்த 4 பேருக்குமே இந்தப் போட்டியில் இது 2-ஆவது பதக்கமாகும்.

ஏற்கெனவே தனிநபர் பிரிவிலும் இவர்கள் பதக்கம் வென்றுள்ளனர். போட்டியில் தற்போது இந்தியா 3 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என 9 பதக்கங்களை வென்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழப்பு

விஜய்யிடம் கணிசமான வாக்குகள் இருந்தாலும் அவை திமுக கூட்டணியைப் பாதிக்காது: காா்த்தி ப. சிதம்பரம்

பவளப்பாறை பயன்கள் குறித்து மீனவா்களுக்கு விழிப்புணா்வு முகாம்

பிரதமா் மோடி இன்று கோவை வருகை: தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டைத் தொடங்கிவைக்கிறாா்

அரியலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT