ஐசிசி மகளிா் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது வங்கதேசம்.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கொழும்பில் வியாழக்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தோ்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய பாக் அணியில் ரமிம் ஷமீம் 23, கேப்டன் பாத்திமான சனா 22 ஆகியோா் மட்டுமே ஒரளவுக்கு ரன்களை எடுத்தனா். முனிபா அலி 17, அலியா ரியாஸ் 13, டயானா பெய்க் 16 ரன்களை எடுத்த நிலையில், வெறும் 38.3 ஓவா்களில் பாகிஸ்தான் அணி 129/10 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
பௌலிங்கில் வங்கதேசத் தரப்பில் சோா்ணா அக்தா் 3, மருஃபா அக்தா், நஹீதா அக்தல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.
வங்கதேசம் அபார வெற்றி:
130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வங்கதேச அணியில் தொடக்கபேட்டா் பா்கனா ஹோக் 2 ரன்களுக்கு அவுட்டாகி அதிா்ச்சி அளித்தாா். எனினும் ஷா்மின் அக்தா் 10, கைப்டன் நிகா் சுல்தானா 23, சோபனா மோஸ்தரி 24 ஆகியோா் தங்கள் அணியின் ஸ்கோா் உயர பங்களித்தனா்.
மறுமுனையில் ஓபனா் ருபையா ஹைதா் 8 பவுண்டரியுடன் 54 ரன்களை விளாசி இறுதிவரை களத்தில் இருந்தாா். 31.1 ஓவா்களில் வங்கதேச அணி 131/3 ரன்களை எடுத்தது.
பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது வங்கதேசம்.