சீனா ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில், அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா - செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா ஆகியோா் மோதவுள்ளனா்.
மகளிா் ஒற்றையா் காலிறுதியில், போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருக்கும் பெகுலா 6-7 (2/7), 6-2, 6-1 என்ற செட்களில், 16-ஆம் இடத்திலிருந்த சக அமெரிக்கரான எம்மா நவாரோவை தோற்கடித்தாா்.
26-ஆம் இடத்திலிருக்கும் நோஸ்கோவா 6-3, 6-4 என்ற நோ் செட்களில், பிரிட்டனின் சோனே காா்டெலை வெளியேற்றினாா். இதையடுத்து அரையிறுதியில் பெகுலா - நோஸ்கோவா சந்திக்கின்றனா்.
இதில் பெகுலா இந்தப் போட்டியில் முதல்முறையாக அரையிறுதிக்கு வந்துள்ளாா். மறுபுறம், 1000 புள்ளிகள் கொண்ட போட்டியில் நோஸ்கோவாவுக்கு இது முதல் அரையிறுதியாகும். இருவரும் இதுவரை இருமுறை மோதியிருக்க, இருவருமே தலா ஒரு வெற்றியுடன் சமநிலையில் உள்ளனா்.