உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில், இந்தியாவுக்கு 2 தங்கம், 2 வெண்கலம் என 4 பதக்கங்கள் வெள்ளிக்கிழமை கிடைத்தன.
ஆடவர் உயரம் தாண்டுதல் டி47 பிரிவில், நிஷாத் குமார் சிறந்த முயற்சியாக 2.14 மீட்டரை தாண்டி தங்கம் வென்றார். அதிலேயே ராம் பால் 1.94 மீட்டருடன் 5-ஆம் இடம் பிடித்தார்.
மகளிர் 100 மீட்டர் டி12 பிரிவில் சிம்ரன் 11.95 விநாடிகளில் இலக்கை அடைந்து, பெர்சனல் பெஸ்ட்டுடன் தங்கத்தை தட்டிச் சென்றார். மகளிர் 200 மீட்டர் டி235 பிரிவில் பிரீத்தி பால் சீசன் பெஸ்ட்டாக 30.03 விநாடிகளில் இலக்கை அடைந்து வெண்கலப் பதக்கம் பெற்றார்.
ஆடவர் வட்டு எறிதல் எஃப்64 பிரிவில் பர்தீப் குமார், சீசன் பெஸ்ட்டாக 46.23 மீட்டரை எட்டி வெண்கலம் வென்றார். மற்றொரு இந்தியரான ஷர்வன் குமார், சீசன் பெஸ்ட்டாக 44.11 மீட்டருடன் 5-ஆம் இடம் பிடித்தார்.
ஆடவர் நீளம் தாண்டுதல் டி64 பிரிவில், சோலைராஜ் தர்மராஜ் 7.08 மீட்டருடன் 7-ஆம் இடம் பெற்றார். மகளிர் குண்டு எறிதல் எஃப்64 பிரிவு இறுதிச்சுற்றில், இந்தியாவின் தயாவந்தி 7.90 மீட்டருடன் 6-ஆம் இடம் பிடித்தார். ஆடவர் வட்டு எறிதல் எஃப்11 பிரிவில், மோனு கங்காஸ் 32.65 மீட்டருடன் 9-ஆம் இடம் பெற்றார்.
ஆடவர் வட்டு எறிதல் எஃப்44 பிரிவில், சாகர் தயத் 51.93 மீட்டருடன் 4-ஆம் இடம் பிடிக்க, தேவேந்தர் குமார் 6-ஆம் இடமும் (50.12), பர்தீப் 8-ஆம் இடமும் (46.14) பிடித்தனர்.
ஆடவர் குண்டு எறிதல் எஃப்46 பிரிவில், சச்சின் சர்ஜேரோ 15.03 மீட்டருடன் 4-ஆம் இடமும், முகமது யாசர் 6-ஆம் இடமும் (14.73), பர்வீன் 8-ஆம் இடமும் (14.24) பிடித்தனர்.
4-ஆம் இடம்: போட்டியின் 7-ஆம் நாளான வெள்ளிக்கிழமை முடிவில், இந்தியா 6 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலம் என 15 பதக்கங்களுடன் 4-ஆம் இடத்தில் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.