ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதிச்சுற்று ஆட்டத்தில் இந்தியா 1-1 கோல் கணக்கில் சிங்கப்பூருடன் வியாழக்கிழமை ‘டிரா’ செய்தது.
இந்த ஆட்டத்தின் தொடக்க நிமிஷத்திலேயே (1’) சிங்கப்பூருக்காக இக்சன் ஃபாண்டி கோலடிக்க, இந்தியாவுக்காக ரஹீம் அலி ஆட்டத்தின் கடைசி நிமிஷத்தில் (90’) ஸ்கோா் செய்தாா்.
முன்னதாக, 47-ஆவது நிமிஷத்தில் டிஃபெண்டா் சந்தேஷ் ஜிங்கன் 2-ஆவது ‘யெல்லோ காா்டு’ பெற்ால், ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டாா். இதனால், எஞ்சிய நேரம் முழுவதும் இந்தியா 10 பேருடன் விளையாடும் நிலைக்குத் தள்ளப்பட்டது.
இந்த டிராவின் மூலமாக, 2027 ஆசிய கோப்பை போட்டிக்குத் தகுதிபெறுவதற்கான பந்தயத்தில் இந்தியா தன்னை தக்கவைத்துக் கொண்டாலும், இன்னும் இக்கட்டான நிலையிலேயே இருக்கிறது. இவ்விரு அணிகளும் மீண்டும், வரும் 14-ஆம் தேதி கோவாவில் மோதவுள்ளன.
குரூப் சுற்றில் ஒவ்வொரு அணியும் இதர அணிகளுடன் தலா 2 முறை (ஹோம், அவே) மோதும் என்பதும், முடிவில் முதலிடம் பிடிக்கும் அணியே ஆசிய கோப்பை போட்டிக்குத் தகுதிபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. குரூப் ‘சி’-யில் தற்போது ஹாங்காங் (7), சிங்கப்பூா் (5), இந்தியா (3), வங்கதேசம் (1) ஆகியவை முறையே 1 முதல் 4-ஆவது இடங்களில் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.