கேரளத்துக்கு வரும் மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டீன அணியின் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் மாதத்தில் நடைபெறும் நட்பு ரீதியான போட்டியில் விளையாட ஆர்ஜென்டீன அணி கேரளத்துக்கு வருகிறது.
இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியுடன் மோதவிருக்கிறது. இதற்கான டிக்கெட் விற்பனை வரும் அக்டோபர் 15ஆம் தேதி தொடங்குகிறது.
இந்த டிக்கெட்டுகளின் விலை குறித்து விரைவில் அறிவிக்கப்படுமென போட்டி ஏற்பட்டாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்த டிக்கெட்டுகளின் விலை தோராயமாக ரூ.3,500 முதல் ரூ.10 லட்சம் வரையிலான வகைமைகளில் இருக்குமென தகவல்கள் தெரிவிக்கின்றன.
நவம்பர் 14ஆம் தேதி கொச்சிக்கு வரும் மெஸ்ஸி, நவ.17ஆம் தேதி நேரு திடலில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாட இருக்கிறார்
கோழிக்கூட்டில் மெஸ்ஸி சாலை வலம் வருவது, கொச்சியில் ரசிகர்களைச் சந்திப்பது குறித்த நிகழ்வுகள் தற்போது பரிசீலித்து வருவதாகவும் இன்னும் உறுதிப்படுத்தவில்லை எனவும் கூறப்படுகிறது.
கொச்சியின் ஜிசிடிஏ 60,000 பார்வையாளர்கள் பங்கேற்கும்படி திடலை தயார்படுத்தி வருகிறது.
ஐஎஸ்எல் போட்டிகளுக்கே 35,000- 40,000 பார்வையாளர்கள் மட்டுமே இருக்கும்படி அமைக்கப்படிருந்த இந்தத் திடலில் தற்போது இருக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
மெஸ்ஸி தனது சொந்த மண்ணில் உலகக் கோப்பை போட்டிக்கான தகுதிச் சுற்றில் கடைசியாக விளையாடிதால் அவர் விரைவில் ஓய்வு பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.