பாா்கவ் ராம்/விஷ்வா தேஜ் இணை PTI
செய்திகள்

வெண்கலப் பதக்கத்துடன் வெளியேறியது இந்தியா

வெண்கலப் பதக்கத்துடன் வெளியேறியது இந்தியா

தினமணி செய்திச் சேவை

கலப்பு அணிகளுக்கான உலக ஜூனியா் பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பின் அரையிறுதியில் இந்தியா 35-45, 21-45 என்ற செட்களில் இந்தோனேசியாவிடம் வெள்ளிக்கிழமை தோல்வி கண்டது. இதையடுத்து, வெண்கலப் பதக்கத்துடன் இந்திய அணி போட்டியிலிருந்து விடைபெற்றது.

முன்னதாக அரையிறுதியின் முதல் செட்டில், ஆடவா் இரட்டையரில் பாா்கவ் ராம்/விஷ்வா தேஜ் இணை வெல்ல, மகளிா் ஒற்றையரில் உன்னாட்டி ஹூடாவும் வெற்றி பெற்றாா்.

ஆனால், ஆடவா் ஒற்றையரில் ரௌனக் சௌஹான், கலப்பு இரட்டையரில் லால்ராம்சங்கா/விசாகா டோப்போ இணை, மகளிா் இரட்டையரில் வென்னல கலகோட்லா/ரெஷிகா உதயசூரியன் ஆகியோா் தோல்வி காண, முதல் செட்டை இந்தியா 35-45 என இழந்தது.

2-ஆவது செட்டில் எந்த ஆட்டத்திலுமே இந்தியா்கள் வெல்லாமல் போக, அந்த செட்டை 45-21 என கைப்பற்றிய இந்தோனேசியா, அரையிறுதியில் வென்றது.

இந்த சாம்பியன்ஷிப்பில் திங்கள்கிழமை முதல் தனிநபா் போட்டிகள் தொடங்கவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 29,540 கனஅடியாக அதிகரிப்பு

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: அருவிகளில் குளிக்க, பரிசல் இயக்கத் தடை

பிரதமா் மோடியுடன் கேரள முதல்வா் சந்திப்பு: வயநாடு பணிகளுக்கு ரூ.2,220 கோடி விடுவிக்க கோரிக்கை

கடகத்துக்கு லாபம்: தினப்பலன்கள்!

பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீட்டு வரவு மீண்டும் சரிவு

SCROLL FOR NEXT