இன்டர் மியாமி வீரர் லூயிஸ் சௌரஸ் தனது வாழ்நாளில் 600 கோல்களை நிறைவு செய்துள்ளார்.
அட்லாண்டா யுனைடெட் அணியுடனான போட்டியில் 4-0 என இன்டர் மியாமி அணி அபார வெற்றி பெற்றது.
லீக்ஸ் கோப்பை இறுதிப் போட்டியின்போது, பயிற்சியாளர் மீது எச்சில் துப்பிய விவகாரத்தில் இன்டர் மியாமி வீரர் லூயிஸ் சௌரஸுக்கு 6 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது.
தடைக்குப் பின்னர் எம்எல்எஸ் தொடரில் விளையாடும் சௌரஸ் நன்றாக விளையாடி வருகிறார்.
உருகுவே நாட்டைச் சேர்ந்த இவர் (38 வயது) 600 கோல்களை நிறைவு செய்து அசத்தியுள்ளார். அந்த நாட்டின் முதல் வீரராக இந்த மைல்கல்லை எட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது, உலக அளவில் லூயிஸ் சௌரஸ் 12-ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். சில்
கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்தவர்கள்
1. கிறிஸ்டியானோ ரொனால்டோ - 946
2. லியோனல் மெஸ்ஸி - 886
3. பீலே - 762
4. ரொமாரியோ - 756
5. ஃபெரென்க் புஸ்கஸ் - 725
6. ஜோசப் பைகன் - 722
7. ராபர்ட் லெவண்டாவ்ஸ்கி - 679
8. ஜிம்மி ஜோன்ஸ் - 639
9. ஜெர்ட் முல்லர் - 634
10. ஜோயி பாம்பிரிக் - 626
11. அபி லென்ஸ்ட்ரா - 624
12. லூயிஸ் சௌரஸ் - 600
13. சில்வா ஃபெராரியா - 578
14. கிளென் ஃபெர்குசன் - 563
15. ஜலடன் இப்ரமோவிச் - 561
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.