இன்டர் மியாமி அணி எம்எல்எஸ் தொடரில் தனது சொந்த மைதானத்தில் அட்லாண்டா யுனைடெட் அணியுடனான போட்டியில் 4-0 என அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் மெஸ்ஸி 2 கோல்கள், 1 அசிஸ்ட் செய்து ஆட்ட நாயகன் விருது வென்றார்.
இந்தப் போட்டியில் மெஸ்ஸி 39, 87-ஆவது நிமிஷங்களில் கோல் அடித்தார். 52-ஆவது நிமிஷத்தில் ஜோர்டி ஆல்பா கோல் அடிக்க மெஸ்ஸி சிறப்பான அசிஸ்ட் செய்தார்.
லூயிஸ் சௌரஸ் மெஸ்ஸியின் 2 சிஸ்ட்டுகளை கோலாக மாற்றத் தவறினாலும் 61-ஆவது நிமிஷத்தில் நம்பமுடியாத அளவுக்கு சிறப்பான கோல் அடித்தார்.
இந்தப் போட்டிக்குப் பிறகு ஜோர்டி ஆல்பா தனது ஓய்வுக்கான கொண்டாட்டம் நடைபெற்றது.
புள்ளிப் பட்டியலில் 62 புள்ளிகளுடன் மூன்றாமிடம் வகிக்கிறது. சின்சினாட்டி அணியும் இதே புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் இருக்க, பிலடெல்பியா 66 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.