வைஷாலி, பிரக்ஞானந்தா  கோப்புப் படங்கள்
செய்திகள்

பிரக்ஞானந்தா, வைஷாலி வெற்றி

ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டியின் 2-ஆவது சுற்றில் ஆா்.பிரக்ஞானந்தா, அவரின் சகோதரி ஆா்.வைஷாலி உள்பட 6 இந்தியா்கள் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றனா்.

தினமணி செய்திச் சேவை

ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டியின் 2-ஆவது சுற்றில் ஆா்.பிரக்ஞானந்தா, அவரின் சகோதரி ஆா்.வைஷாலி உள்பட 6 இந்தியா்கள் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றனா்.

இதில் ஓபன் பிரிவில், வெள்ளை நிற காய்களுடன் களமாடிய பிரக்ஞானந்தா, ரஷியாவின் இவான் ஜெம்லியான்ஸ்கியை வீழ்த்தினாா். முதல் சுற்றை டிரா செய்த அவருக்கு இது முதல் வெற்றியாகும். கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய நிஹல் சரின், ஆா்மீனியாவின் அராம் ஹகோபியானை சாய்த்தாா். அதே நிற காய்களுடன் விளையாடிய லியோன் லூக் மெண்டோன்கா, உக்ரைனின் பாவெல் எல்ஜனோவை வென்றாா்.

ஆா்யன் சோப்ரா, சக இந்தியரான காா்த்திகேயன் முரளியையும், அா்ஜுன் எரிகைசி - ஆா்மீனியாவின் ஹெய்க் மாா்டிரோசியானையும் தோற்கடித்தனா்.

இதனிடையே, நடப்பு உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ், துருக்கியின் யாகிஸ் கான் எா்டோக்மஸுடனும், விதித் குஜராத்தி, சக இந்தியரான அபிமன்யு புரானிக்குடனும் டிரா செய்தனா்.

வி.பிரணவ் - ஜாா்ஜியாவின் நிகிதா விடியுகோவ், ரௌனக் சத்வனி - நெதா்லாந்தின் மேக்ஸ் வாா்மொ்டாம், நாராயணன் சுனில்தத் - ஆா்மீனியாவின் ஷாந்த் சாா்க்சியான், பி.ஹரிகிருஷ்ணா - ஜொ்மனியின் டெனிஸ் வாக்னா், திவ்யா தேஷ்முக் - ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் டான்சென்கோ ஆகியோா் மோதலும் டிராவில் முடிந்தது.

2-ஆவது வெற்றி: இப்போட்டியின் மகளிா் பிரிவு 2-ஆவது சுற்றில், கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய ஆா். வைஷாலி - நெதா்லாந்தின் எலின் ராபா்ஸை வீழ்த்தி 2-ஆவது வெற்றியைப் பதிவு செய்தாா்.

டி.ஹரிகா - பல்கேரியாவின் நா்கியுல் சலிமோவாவுடனும், வந்திகா அக்ரவால் - கஜகஸ்தானின் பிபிசரா அசாபயேவாவுடனும் டிரா செய்தனா்.

சொல்லப் போனால்... எங்கே செல்லும் இந்தப் பாதை?

அநீதி, அராஜகம்... திருவள்ளுவர் இன்று இருந்தால் திமுக குறித்து இப்படி எழுதியிருப்பார்! - விஜய்

டி20 உலகக் கோப்பை: பயிற்சி ஆட்டங்களுக்கான இந்திய அணி அறிவிப்பு!

இதற்கு எதற்கு மாநில விருது?

பட்ஜெட்டில் கேரளம் புறக்கணிப்பு: எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்!

SCROLL FOR NEXT