கோல் அடித்த மகிழ்ச்சியில் இந்திய ஹாக்கி மகளிர் அணியினர்.  படம்: எக்ஸ் / ஹாக்கி இந்தியா.
செய்திகள்

சூப்பர் 4 சுற்றில் டிரா: நடப்பு சாம்பியன் ஜப்பானை வெளியேற்றியது இந்தியா!

ஆசிய கோப்பை இறுதிக்கான வாய்ப்பை தக்கவைத்த இந்திய அணி குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

மகளிருக்கான ஹாக்கி ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டியில் இந்திய மகளிரணி 1-1 என டிரா செய்தது.

இதன்மூலம், இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைத்துள்ளது.

சீனாவில் நடைபெற்று வரும் மகளிருக்கான ஹாக்கி ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டியில் இந்திய அணி நடப்பு சாம்பியனான ஜப்பானுடன் மோதியது.

இந்தப் போட்டியின் தொடக்கத்திலேயே (7ஆவது நிமிஷத்தில்) இந்திய வீராங்கனை பியூட்டி டங் டங் கோல் அடித்து அசத்தினார்.

பின்னர், இரண்டாம் பாதியில் ஜப்பான் வீராங்கனை 58-ஆவது நிமிஷத்தில் ஷிகோ கோபயக்வா கோல் அடித்து சமன்செய்தார்.

இந்த வெற்றியின் மூலம் நடப்பு சாம்பியனை இறுதிப் போட்டிக்கு முன்னேற விடாமல் இந்திய அணி தடுத்தது.

இந்திய அணி 4 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. கடைசி போட்டியில் சீனா - தென் கொரியா மோதுகின்றன.

இந்தப் போட்டியில் சீனா டிரா அல்லது வென்றாலோ இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

6 புள்ளிகளுடன் இருக்கும் சீனா ஏற்கெனவே இறுதிப் போட்டிக்குத் தேர்வாகியதும் கவனித்தக்கது.

சூப்பர் 4 புள்ளிப் பட்டியல்

1. சீனா - 6 புள்ளிகள் (2 போட்டிகள்)

2. இந்தியா - 4 புள்ளிகள் (3 போட்டிகள்)

3. ஜப்பான் - 2 புள்ளிகள் (3 போட்டிகள்)

4. தென் கொரியா - 1 புள்ளி (2 போட்டிகள்)

India squandered an early lead to play out a 1-1 draw against Japan in their last Super 4s match to keep their hopes alive for a place in the final of the women's Asia Cup here on Saturday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ.88.66 ஆக நிறைவு!

பிரதி மாதம் மாமன்றக் கூட்டத்தை நடத்த பாஜக வலியுறுத்தல்

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT