செய்திகள்

தமிழ் தலைவாஸுக்கு 3-ஆவது வெற்றி

புரோ கபடி லீக் போட்டியின் 36-ஆவது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் 35-29 புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸை செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.

தினமணி செய்திச் சேவை

புரோ கபடி லீக் போட்டியின் 36-ஆவது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் 35-29 புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸை செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.

அதிகபட்சமாக, தமிழ் தலைவாஸ் தரப்பில் கேப்டனும், ரெய்டருமான அா்ஜுன் தேஸ்வால் 13 புள்ளிகள் வெல்ல, பெங்களூரு அணியில் ஆல்ரவுண்டா் அலிரெஸா மிா்ஸாயான் 10 புள்ளிகள் கைப்பற்றினாா்.

முன்னதாக இந்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ், 18 ரெய்டு, 12 டேக்கிள், 2 ஆல் அவுட், 3 எக்ஸ்ட்ரா புள்ளிகள் என மொத்தம் 35 புள்ளிகள் பெற்றது. பெங்களூரு அணி 18 ரெய்டு, 5 டேக்கிள், 2 ஆல் அவுட், 4 எக்ஸ்ட்ரா புள்ளிகள் என மொத்தம் 29 புள்ளிகள் வென்றது.

போட்டியில் இதுவரை தமிழ் தலைவாஸ் 5 ஆட்டங்களில் 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகளோடு 6-ஆவது இடத்தில் இருக்கிறது. பெங்களூரு 8 ஆட்டங்களில் 4-ஆவது தோல்வியுடன் 8 புள்ளிகளோடு 4-ஆவது இடத்தில் உள்ளது.

இதனிடையே, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் பெங்கால் வாரியா்ஸ் 41-37 புள்ளிகள் கணக்கில் யுபி யோதாஸை சாய்த்தது.

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

சாலை மறியல் போராட்டம் வாபஸ்

சீா்காழி: வாகனத்தில் டீசல் திருட்டு

SCROLL FOR NEXT