உலக தடகள சாம்பியன் ஷிப் தொடரில் இருந்து ஒலிம்பிக் சாம்பியன்களான இந்தியாவின் நீரஜ் சோப்ரா மற்றும் பாகிஸ்தானில் அர்ஷத் நதீம் இருவரும் இறுதிச்சுற்றுக்கு முந்தையச் சுற்றில் தோல்வியடைந்து வெளியேறினர்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், உலக தடகள சாம்பியன்ஷிப்பின் 20 வது சீசன் நடைபெற்று வருகிறது.
இந்தியா சார்பில் 14 வீரர்கள், 5 வீராங்கனைகள் என மொத்தம் 19 பேர் உள்பட உலகின் 198 நாடுகளில் இருந்து மொத்தமாக 2202 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில், ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றுப் போட்டி நடைபெற்றது.
ஏ பிரிவில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களான இந்தியாவின் நீரஜ் சோப்ராவுடன், பாகிஸ்தானின் அர்ஷத் நதீம், ஜெர்மனி வீரர் ஜூலியன் வெபர், ஜாகுப் வாடில் (செக்குடியரசு) மற்றும் கெஷோர்ன் வால்காட் உள்ளிட்ட வீரர்களும் இடம்பெற்றிருந்தனர்.
இந்த நிலையில், போட்டியில் ஏமாற்றமளித்த ஒலிம்பியன் நீரஜ் சோப்ராவால் 84.03 மீட்டர் தூரம் மட்டுமே ஈட்டி எறிய முடிந்தது. இதனால், அவர் 8-வது இடத்தைப் பிடித்தார். 2021 ஆம் ஆண்டு ஒலிம்பிக் தங்கத்தை வென்ற அதே மைதானத்தில் தோல்வியடைந்த நீரஜ் சோப்ரா, மிகுந்த ஏமாற்றத்துக்குள்ளானார்.
அவரைத் தொடர்ந்து பாரீஸ் ஒலிம்பிக்கில் முதல்முறையாக 90 மீட்டர்களுக்கு மேல் ஈட்டி எறிந்து தங்கம் வென்ற அர்ஷ்த் நதீம் 10-வது இடத்துக்குத் தள்ளப்பட்டார். அவரால், 82.75 தொலைவுக்கு மட்டுமே ஈட்டி எறிய முடிந்தது.
ஜூலியன் வெப்பர் 86.11 தொலைவுக்கு ஈட்டி எறிந்தும் அவரால் பதக்கத்தை வெல்ல முடியவில்லை. அவர் 5 ஆம் இடம்பிடித்தார்.
இந்திய தரப்பில் பங்கேற்ற மற்றொரு வீரரான சச்சின் யாதவ் தொடக்கம் முதலே சிறப்பாக ஈட்டி எறிந்தார். 86.27 தொலைவுக்கு ஈட்டி எறிந்து 4-வது இடத்தைப் பிடித்து அசத்தினார்.
இதனால், இறுதிப்போட்டிக்கு 6 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில், இந்தியாவில் சச்சின் யாதவும் தேர்வு செய்யப்பட்டார்.
88.16 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து டிரினிடாட் மற்றும் டொபாகோவின் கெஷோர்ன் வால்காட தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
அவரைத் தொடர்ந்து கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் (87.38 மீ) மற்றும் கர்டிஸ் தாம்சன் (86.67 மீ) தொலைவுக்கு ஈட்டி எறிந்து இருவரும் முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.