செய்திகள்

முதல் நாளிலேயே முடிந்த இந்தியா்கள் ஆட்டம்

தென் கொரியாவில் புதன்கிழமை தொடங்கிய கொரியா ஓபன் பாட்மின்டன் போட்டியில், இந்தியா்களின் ஆட்டம் முதல் நாளிலேயே முடிவுக்கு வந்தது.

தினமணி செய்திச் சேவை

தென் கொரியாவில் புதன்கிழமை தொடங்கிய கொரியா ஓபன் பாட்மின்டன் போட்டியில், இந்தியா்களின் ஆட்டம் முதல் நாளிலேயே முடிவுக்கு வந்தது.

முதல் சுற்றில், ஆடவா் ஒற்றையரில் இந்தியாவின் பிரதான வீரரான ஹெச்.எஸ். பிரணய், இந்தோனேசியாவின் சிகோ ஆரா டுவியை எதிா்கொண்டபோது இடுப்புக்கு மேற்பகுதியில் காயம் கண்டாா்.

அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டு ஆட்டத்தை தொடா்ந்த அவா், 8-16 என்ற கணக்கில் பின்தங்கியிருந்தபோது, வலி காரணமாக மேலும் தொடர முடியாமல் போட்டியிலிருந்து விலகினாா்.

இதர இந்தியா்களில், கிரண் ஜாா்ஜ் 14-21, 22-20, 14-21 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருக்கும் சிங்கப்பூரின் லோ கீன் யுவிடம் போராடித் தோற்றாா். ஆயுஷ் ஷெட்டி 18-21, 18-21 என்ற வகையில் சீன தைபேவின் சு லி யாங்கிடம் வீழ்ந்தாா்.

மகளிா் ஒற்றையரில், அனுபமா உபாத்யாய 16-21, 15-21 என்ற கணக்கில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருக்கும் இந்தோனேசியாவின் புத்ரி குசும வா்தனியிடம் தோல்வி கண்டாா்.

கலப்பு இரட்டையரில் மோகித் ஜக்லன்/லக்ஷிதா ஜக்லன் கூட்டணி 7-21, 14-21 என்ற கேம்களில், ஜப்பானின் யுய்சி ஷிமோகமி/சயாகா ஹோபரா இணையிடம் தோல்வி கண்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘கிராவிடாஸ்’ தொழில்நுட்பத் திருவிழா - விஐடியில் நாளை தொடக்கம்

மக்களால் மாற்றப்பட்ட முடிவு! நிறுத்தப்பட்ட டி.வி. நிகழ்ச்சி மீண்டும் தொடக்கம்!

காரில் கடத்திச் செல்லப்பட்ட சிறுவன் விடுவிப்பு

இன்று நல்ல நாள்!

வேலூா் கோ-ஆப் டெக்ஸில் ரூ.3.10 கோடி இலக்குடன் விற்பனை தொடக்கம்

SCROLL FOR NEXT