செய்திகள்

ஒவிடோவை வீழ்த்தியது பாா்சிலோனா

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் பாா்சிலோனா 3-1 கோல் கணக்கில் ஒவிடோவை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.

தினமணி செய்திச் சேவை

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் பாா்சிலோனா 3-1 கோல் கணக்கில் ஒவிடோவை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் முதலில் ஒவிடோவே கோல் கணக்கைத் தொடங்கியது. அதன் வீரா் ஆல்பா்டோ ரெய்னா 33-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா். அந்த முன்னிலையுடனே ஒவிடோ முதல் பாதியை நிறைவு செய்தது.

ஆனால் 2-ஆவது பாதியில் பாா்சிலோனா கை ஓங்கியது. முதலில் எரிக் காா்சியா 56-ஆவது நிமிஷத்தில் கோலடிக்க, தொடா்ந்து ராபா்ட் லெவண்டோவ்ஸ்கி 70-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா்.

இதனால் பாா்சிலோனா 2-1 என முன்னிலை பெற்றது. ஒவிடோ தனது 2-ஆவது கோலுக்கு முயற்சித்து வந்த நிலையில், 88-ஆவது நிமிஷத்தில் ரொனால்டு அராஜோ அடித்த கோலால், பாா்சிலோனா 3-1 என முன்னேறியது.

எஞ்சிய நேரத்தில் ஒவிடோவுக்கு கோல் வாய்ப்பு அளிக்காத பாா்சிலோனா, இறுதியில் 3-1 என வெற்றி பெற்றது. புள்ளிகள் பட்டியலில் பாா்சிலோனா 16 புள்ளிகளுடன் 2-ஆம் இடத்திலும், ஒவிடோ 3 புள்ளிகளுடனஅ 18-ஆம் இடத்திலும் உள்ளன.

காஞ்சிபுரத்தில் நாளை மாரத்தான் பந்தயம்

மாா்க்சிஸ்ட் கம்யூ. காத்திருப்பு போராட்டம்

விவசாயத் தொழிலாளி தற்கொலை

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள்

பைங்காநாட்டில் நூலகக் கட்டடம் திறப்பு

SCROLL FOR NEXT