இங்கிலாந்தைச் சேர்ந்த கால்பந்து வீரர் ஹாரி கேன் (32 வயது) கிளப் கால்பந்து போட்டிகளில் அதிவேகமாக 100 கோல்களை அடித்து சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன்பாக கிறிஸ்டியானோ ரொனால்டோ, எர்லிங் ஹாலண்ட் அடித்ததை விட குறைவான போட்டிகளில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
ஜெர்மனியின் புன்டெஸ்லீகா கால்பந்து தொடரில் எஃப்சி பெயர்ன் மியூனிக் அணியும் வெர்டர் அணியும் மோதின.
இந்தப் போட்டியில் ஹாரி கேன் 45 (பெனால்டி), 65ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து அசத்த, இறுதியில் 4-0 என பெயர்ன் மியூனிக் வென்றது.
இத்துடன் ஹாரி கேன் பெயர்ன் மியூனிக் அணிக்காக 100 கோல்களை 104 போட்டிகளில் நிறைவு செய்துள்ளார்.
ஐரோப்பாவின் டாப் 5 கால்பந்து கிளப் போட்டிகளில் இவர்தான் அதிவேகமாக இந்த மைல்கல்லை எட்டியுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.
அதிவேகமான 100 கோல்கள்
1. ஹாரி கேன் - 104 போட்டிகளில் (பெயர்ன் மியூனிக்)
2. கிறிஸ்டியானோ ரொனால்டோ - 105 போட்டிகள் (ரியல் மாட்ரிட்)
3. எர்லிங் ஹாலண்ட் - 105 போட்டிகள் (மான்செஸ்டர் சிட்டி)
4. லூயிஸ் சௌரஸ் - 120 போட்டிகள் (பார்சிலோனா)
5. ஜ்லடான் இம்பரமோவிச் - 124 போட்டிகள் (பிஎஸ்ஜி)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.