ஆர்சிபிக்கு எதிரான போட்டி! குஜராத்துக்கு 156 ரன்கள் இலக்கு!
பெங்களூரு அணி 19.2 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களை எடுத்துள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 156 ரன்களை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இலக்காக நிர்ணயித்துள்ளது. பெங்களூரு அணி 19.2 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களை எடுத்துள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே இன்று (ஏப். 30), ஐபிஎல் தொடரின் 42வது போட்டி நடைபெற்றது.
அகமதாபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து பெங்களூரு அணி பேட்டிங் செய்தது.
Advertisement
Advertisement
தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜேக்கப் பெத்தெல் விராட் கோலி இணை தடுமாற்றமான தொடக்கத்தை கொடுத்தாலும், அடுத்து களமிறங்கிய படிக்கல், அதிரடியாக விளையாடி 24 பந்துகளில் 40 ரன்களை எடுத்தார்.
விராட் கோலி 28 ரன்களுடன் ஆட்டமிழக்க அடுத்து வந்த ரஜத் படிதர் 15 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் பிறகு வந்த ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், குருனால் பாண்டியா, ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர்.
வெங்கடேஷ் அய்யர் (12), புவனேஷ்வர் குமார் (15) சொற்ப ரன்களில் வெளியேறிய நிலையில், 19.2 ஓவர்களில் 155 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையுமே பெங்களூரு அணி இழந்தது.
இதனால் குஜராத் அணிக்கு 156 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
IPL 2026 Gujarat Titans vs Royal Challengers Bengaluru
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.