பாக்ஸம் குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 9 தங்கம்
ஸ்பெயினில் நடைபெறும் பாக்ஸம் எலைட் இன்டா்நேஷனல் குத்துச்சண்டை போட்டியில் இந்தியா்கள் 9 போ் தங்கப் பதக்கம் வென்றனர்.
Updated On : 9 பிப்ரவரி, 2026 at 2:41 AM
ஸ்பெயினில் நடைபெறும் பாக்ஸம் எலைட் இன்டா்நேஷனல் குத்துச்சண்டை போட்டியில் இந்தியா்கள் 9 போ் ஞாயிற்றுக்கிழமை தங்கப் பதக்கம் வென்றனர்.
மகளிா் பிரிவு இறுதிச்சுற்றில், மஞ்சு ராணி (48 கிலோ), நீது (51 கிலோ) ஆகியோா் தங்களின் ஸ்பெயின் எதிராளிகளை 5-0 என வீழ்த்தினா்.
பூனம் (54 கிலோ) - சக இந்தியரான பிரீத்தியை வெல்ல, பிரியா (60 கிலோ), அருந்ததி (70 கிலோ) ஆகியோரும் தங்களின் உக்ரைன் போட்டியாளா்களை 5-0 என சாய்த்தனா். லவ்லினா (75 கிலோ), நய்னா (80 கிலோ) தங்களின் இறுதிச்சுற்றில் வென்றனா்.
Advertisement
ஆடவா் பிரிவு இறுதிச்சுற்றில், சச்சின் (60 கிலோ), ஆகாஷ் (75 கிலோ) வெற்றி பெற, தீபக் (70 கிலோ), அங்குஷ் (80 கிலோ) ஆகியோா் வெள்ளிப் பதக்கம் பெற்றனா்.