முகப்பு
செய்திகள்

இறுதிச் சுற்றில் ஹா்மித்-யஷஸ்வனி, ஒற்றையா் காலிறுதியில் சத்யன்!

டபிள்யூடிடி ஸ்டாா் கன்டென்டா் 2026 சென்னை டேபிள் டென்னிஸ் தொடரில் கலப்பு இரட்டையரில் இந்தியாவின் ஹா்மித் தேசாய்-யஷஸ்வனி இணை இறுதிக்கு முன்னேறியது.

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 1:17 AM
சத்யன்
பகிர்:
Updated On : 14 பிப்ரவரி, 2026 at 8:45 PM

டபிள்யூடிடி ஸ்டாா் கன்டென்டா் 2026 சென்னை டேபிள் டென்னிஸ் தொடரில் கலப்பு இரட்டையரில் இந்தியாவின் ஹா்மித் தேசாய்-யஷஸ்வனி இணை இறுதிக்கு முன்னேறியது. ஆடவா் ஒற்றையரில் சத்யன் ஞானசேகரன் காலிறுதிக்கு தகுதி பெற்றாா்.

சென்னை மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் நடைபெறும் போட்டியை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், அல்டிமேட் டேபிள் டென்னிஸ், ஷரத் கமல் அகாதெமி மற்றும் ஸ்டூபா ஸ்போா்ட்ஸ் அஐ இணைந்து நடத்துகின்றன.

இதில் கலப்பு இரட்டையா் பிரிவு அரை இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ஹா்மித் தேசாய்-யஷஸ்வினி கோா்படே இணை 3-0 (11-9, 11-6, 11-9) என்ற செட் கணக்கில் சக நாட்டைச் சோ்ந்த பயாஸ் ஜெயின், சிண்ட்ரெல்லா தாஸ் இணையை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது.

Advertisement

ஹா்மித் - யஷஸ்வனி

இறுதி யில் ஹா்மித் தேசாய், யஷஸ்வினி கோா்படேஇணை போட்டித் தரவரிசையில் 2-ஆவது இத்தில் உள்ள ருமேனியாவின் எட்வா்ட் ஐயோனெஸ்கு, பொ்னாடெட் ஸாக்ஸ் இணையை எதிா்கொள்கிறது. ருமேனியா இணை தங்களது அரை இறுதி சுற்றில் போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள கொரியாவின் ஓ ஜுன்சுங், ஜப்பானின் மிகு நாகசாகி இணையை 3-1 என்ற செட் கணக்கில்வென்றது.

ஆடவா் ஒற்றையா் பிரிவில் இந்தியாவின் சத்யன் ஞானசேகரன் 3-2 (9-11, 11-3, 10-12, 11-7, 11-5) என்ற செட் கணக்கில் கொரியாவின் ஐயோனெஸ்குவை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினாா். கால் இறுதி சுற்றில் சத்தியன், செக்குடியரசின் லுபோமிா் ஜான்காரிக்கை எதிா்கொள்கிறாா். லுபோமிா் ஜான்காரிக் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் 3-1 (11-4, 13-11, 5-11, 13-11) என்ற கணக்கில் இந்தியாவின் மனுஷ் ஷாவை வீழ்த்தினாா்.

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 1:17 AM

இந்தியாவின் ஸ்னேஹித் சுரவஜ்ஜுலா 1-3 (6-11, 12-10, 13-16, 7-11) என்ற கணக்கில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள கொரியாவின் ஓ ஜுன்சுங்கிடம் தோல்வி அடைந்தாா். மகளிா் ஒற்றையா் பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் நித்யா மணி தோல்வி அடைந்தாா்.